சனி, 23 பிப்ரவரி, 2013
கொய்யாப் பழம்
கொய்யாப் பழத்தில் வைட்டமின்-சி, பி, கால்சியம், மாக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள் நிறைந்து இருக்கின்றன.
+இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
+தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைக ளுக்கு, கொய்யாப் பழத்தின்
விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு
வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம்.
குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
சர்க்கரை நோயாளிக ளுக்குக் கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில்
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா
தீர்வு தரும்.
நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு
அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி
மயக்கம் வரலாம்.
கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட
பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால்
நல்லது.
ஆஸ்துமா, வாதநோய், மற்றும் 'எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது.
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

திங்கள், 11 பிப்ரவரி, 2013
தேனின் மருத்துவ குணங்கள்
தேனீ |
மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம்
பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை
சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.
தேன் எவ்வாறு உருவாகிறது?
நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.
200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம்
ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான
சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம்
அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால்
அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம்
கலந்த உண்மை.
யார் யாரெல்லாம் பருகலாம்?
தேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம்.
நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன்.
அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம்
பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு
மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை
உண்ணக்கொடுப்பர்.
தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, DYSENTARY) போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.
வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் (Constipation, stomach problems) அனைத்தும் நீங்கிவிடும்.

தூக்கத்தைத் தூண்டும் தேன்:
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக்
கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால்
குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.
தேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை (Heart, lung, gastric) ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும்(Blood vessel, bowel ) சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

- தேன் சிறுநீர் அடைப்பை (Urinary obstruction ) நீக்கும்
- தேன் மலச்சிக்கலை(Constipation) குணப்படுத்தும்
- கபத்தால் (Phlegm ) ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.
- இளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.
- பெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.
- தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
- மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
- இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
- ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
- ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
- நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
- கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
இவ்வளவு பயனை அளிக்கும் தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பற்றிய ஒரு சில தகவல்களையும் தெரிந்துகொள்வோமே..!
தேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:
- மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.
- புயல் (Storm) வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.
- தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.
- ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.
- தேனீக்களின் எச்சமே (Residue of the bees) நாம் சுவைக்கும் தேன்.
- ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.
- தேனீ ஒரு சைவ உண்ணி
- ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.
- தேனீக்களுக்கு இரைப்பைகள் இரண்டு.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.
- தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.
- தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)
- ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.
தேனீ
சனி, 9 பிப்ரவரி, 2013
சூரியப் புயல் (Solar Storms)
பூமியின் வடதுருவத்தில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான
ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியிருக்கிறது..
தாக்கும்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கிறது... மின்னல் ஒளிபோலவும், வானத்தில் ஒளி பாய்ச்சுவது
போன்ற தோற்றத்தில் காந்தப்புயல் தாக்கியத்தாக தகவல்கள்
வெளிவந்திருக்கிறது. நாம் முன்னரே சூரிய பார்த்த சூரியப் பயுல் பூமியைத் தாக்கும் அபாயம் என்ற பதிவில் சூரியப் புயல் என்றால் என்ன என்று பார்த்திருந்தோம்.
சூரியப் புயலின் வெளிப்பாடு.. |
உலகம் அழிந்துவிடுமா? என்பன போன்ற பலவிதமான தகவல்களால் உலக மக்களிடையே
பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த சூரியப்புயலானது சற்றே
அச்சத்தை வரவழைத்துள்ளது.
இந்நிலையில் சூரியப் புயலின் தாக்கம் பூமியின் வடமுனையில் இருக்கிற நாடுகளில் தாக்கியிருப்பதால், அங்கு விமானப் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். சூரியனில் ஏற்பட்ட கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சானது பூமியை வந்தடைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Scientist Richard Fisher |
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான
ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில்
நீலம்-பச்சை(blue-green Rays) நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது.
மின்னல் ஒளித் தாக்கத்தை போன்ற ஒளி வெள்ளம் காணப்பட்ட காந்தப்புயல்
தாக்கியது.
இந்நிகழ்வை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் வருடந்தோறும் செப்டம்பர், அக்டோபர், மார்ச், மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான பாதை மாற்றியமைப்பு(Adjustment to the flight path:):
சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு
பாதிக்கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம்
ஆங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென்
பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது.
சூரிய புயல்(Solar storms:):
சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து இடைவிடாது எரிந்து
கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பம், பூமியை எட்டுவதால் தான் பூமியில்
வெப்பம் ஏற்படுகிறது. இதே போல சூரியன் எரிவதால் ஏற்படும்
வெளிச்சத்தால்தான் நமக்கு பகலில் வெளிச்சம் கிடைக்கிறது.. சூரியன் நீண்ட
தூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு
வருகிறது. இதனால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.
சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது
பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
இது போன்ற சூழ்நிலையில்தான் ஆகஸ்ட் 1ம் தேதி காலை சூரியனின் மேல் பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போன்று 2 முறை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பானது பூமி உருண்டையின் அளவைவிட சற்று அதிகமாக இருந்தது.. அடுத்து சில நிமிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு முதல் வெடிப்பை சற்று சிறியதாக இருந்தது. இந்நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பின் போது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அந்த வெப்பம் பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்தது.
இந்த வெப்பமானது பூமியை வந்தடையும்போது அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என கணிக்க முடியவில்லை. சாதாரணமாக சூரியனின் வெப்பம் நேரடியாக பூமியை தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் போர்வை போன்று தடுக்கின்றன. இந்த வாயுக்களால் வெப்பம் உள்வாங்கப்பட்டு, பிறகுதான் குறைந்த அளவான வெப்பம் பூமியை வந்தடைகிறது.
பூமி வெப்பமயமாதலால் வாயுமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது என்பதை நாம் முன்பே அறிந்திருக்கிறோம். இத்தகைய பல்வேறு அடுக்குகளைக் கொண்ட வாயுமண்டலம் காரணமாகவே சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தால் நாம் அதிகம் பாதிக்கபடாமல் இருக்கிறோம். இத்தகைய வாயு மண்டலங்கள் சூரியப் புயலால் ஏற்பட்ட வெப்பத்தை தடுக்க முடியாவிட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

செயற்கோள்களை தாக்கும் சூரிய புயல் |
பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான
செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இச் செயற்கைகோள் தகவல் தொடர்பு
உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும்
வெப்பம் செயற்கைகோள்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதே போன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013-ல் அதிகமாக இருக்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க
உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை
ஏற்படும்.
எனவே அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக் கோள்கள்(Satellites), கப்பல்கள், விமானங்கள், வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்சினை ஏற்படும்.

சூரியப் புயலால் ஏற்படும் தாக்கத்தை குறிப்பிடும் படம்.. |
பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்வது
கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால்
மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும் என்று நாசாவின்
ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர்
கூறுகிறார்.
'விண் வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ்ஷரின்(Scientist Richard Fisher) எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் - Scientist Richard Fisher(69) சூரிய மின் காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து ரிச்சர்ட் பிஷ்ஷர்(Scientist Richard Fisher)..
22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக
வெளிப்படுகிறது. பதினொரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின்காந்த
புயல்(Magnetic storm) ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல்
காணப்படுகிறது.
அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரிய புயல்(Solar storms) ஏற்படுவதை அறியலாம். வரும் 2013-ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ள தால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம்(Radiation) வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் வட ஐரோப்பா(Northern Europe) மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் (Power stations)எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.

கண்ணாடியின் தோற்றம்
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை
உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து
கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும்,
அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும்
முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில்
உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம்
ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி
செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு
ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை
உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.
இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

***
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)