மோனோசோடியம் குளுடாமேட் தெரியுமா உங்களுக்கு? தெரியாது என்று சொல்பவர்கள் யாராயினும் அஜினோமோட்டோ என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுவை கூட்டும் தூள் என்று விளம்பரம் செய்யப்படும் அஜினமோட்டோவின் வேதியல் பெயர்தான் அது! உணவில் கலக்கப்படும் விஷம் என்றுகூடச் சொல்லலாம். MSG என்றும் சொல்லப்படுகிறது. ஒரு துளி கலந்தால் சுவை கூடும் ஆனால் வயிறு என்னவாகும் தெரியுமா? அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் நம் வயிற்றையும் உடம்பையும் பாதிக்கும். இன்று நம்மால் தவிர்க்கமுடியாத ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கண்டிப்பாக இந்த வியாதிகள் அஜினமோட்டோ உருவில் விற்கப்படுகின்றன. உயர்ந்த ரக உணவகங்களில் இது கலக்கப்படுவதில்லை! ஆனால் மலிவு விலைக்கடைகளில் சுவைகூட்டி மக்களைக் கவர உணவில் கலக்கப்படுகிறது. பொதுவாக சைனீஸ் உணவு வகைளான நூடுல்ஸ், சில்லி ட்ரை உணவு வகைகள் அனைத்திலும் இந்த விஷம் கலக்கப்படுகிறது. எனவே அவற்றைத் தவிர்த்தல் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு முக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக