1927-ம் ஆண்டு சிறுவன் ஒருவன் சாலையைக் கடந்து கொண்டிருக்கையில், வேகமாக வந்த குதிரை வண்டி ஒன்று அவனை முட்டித் தள்ளவிருந்தது. நூலிழையில் அந்த ஆபத்தில் இருந்து தப்பினான் சிறுவன்.
வீட்டுக்குத் திரும்பிய அச்சிறுவன் மனதில், தன் மீது குதிரை வண்டி மோதவிருந்ததே நிழலாடிக் கொண்டிருந்தது.
பாதசாரிகளுக்கு சாலையில் செல்லும் வண்டிகளால் ஏற்படக்கூடிய இத்தகைய ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்யும் கருவி ஒன்று இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்தான் அந்தச் சிறுவன்.
சிறிய சுத்தியல் ஒன்றை எடுத்து, அதை சுருள் கம்பி ஒன்றுடன் இணைத்தான் அவன். பின்னர் அந்த அமைப்பை இரும்புப் பெட்டி ஒன்றில் பொருத்தி, தன் காலால் அந்த அமைப்பின் விசையிழுப்பை அழுத்தினான். உடனே கணீரென்ற ஒலி ஏற்பட்டது.
அந்தச் சிறுவன் பெயர் வால்டர் ஹண்ட். குதிரை வண்டியில் பொருத் தக்கூடிய இம்மாதிரியான முதல் எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித் தவன் அவன்தான். அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் இல்லாததால் குதிரை வண்டியில் பொருத்தும் எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித் தான் வால்டர் ஹண்ட்.
குதிரை வண்டியில் குதிரையின் கடிவாளத்தை வண்டியோட்டி தனது இரு கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டி யிருந்ததால், கால்களைக் கொண்டு எச்சரிக்கை மணியை இயக்கும் வகையில் அவன் வடிவமைத் தான். சீக்கிரமே இந்த எச்சரிக்கை மணி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, எச்சரிக்கை மணியில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
ஆனால் இப்படி ஓர் உருப்படியான கண்டுபிடிப்பை வழங்கிய வால்டர் ஹண்டுக்கு பொருளாதார ரீதியாக பெரிதாகப் பயன் ஏற்படவில்லை. கடன்தான் அதிகமாயிற்று. கடன் கொடுத்த ஒருவன், வால்டரை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான். வெறுத்துப் போன வால்டர் தனது பட்டறையில் உட்கார்ந்து, கையில் கிடைத்த ஒரு செப்புக் கம்பியை இப்படியும் அப்படியுமாக முறுக்கிக் கொண்டிருந்தான்.
அப்போது இன்னொரு சிறிய, ஆனால் பயனுள்ள பொருள் கிடைத்தது. அதுதான் `சேப்டி பின்'. மை ஊற்றி எழுதும் ஊற்றுப் பேனாவை (பவுன்டன் பென்) கண்டுபிடித்ததும் வால்டர் ஹண்ட்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக