செவ்வாய், 30 அக்டோபர், 2012

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு


1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார். 
ஹான்ஸ் லிப்பன்ஷி  சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.
galileo_telescope_320ப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.
தன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 
லிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன. 
telescope_320ந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது. 
து வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.
ஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

உலக அப்பிள் தினம் - (அக்டோபர் 21)


அக்டோபர் மாதம் 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்...

  • உலகளாவியரீதியில் 7500இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.



  • வாழைப்பழங்கள், தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.
  • கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
  • கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/ தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  •  அப்பிள் மரங்கள், ஒரு அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.
  • அப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.
  •  புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.
  •  அப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.
  •  அப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"
  • அப்பிள் மரங்கள் 4  5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.
 

  • தூய அப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.
  • அப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetinஅடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.
  • நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.
  • உலகில் அதிகளவில் அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.
  •  ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும். 




தினசரி ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவியரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.


***


செவ்வாய், 16 அக்டோபர், 2012

வெள்ளை மாளிகையின் மகத்துவம்


ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய
வெள்ளை மாளிகைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுடன்(13 அக்டோபர் 2012) 220 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 

வெள்ளை மாளிகை தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள்...

Ø  அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோர்ஜ் வோஷிங்டன் பதவிக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி வாசஸ்தல  நிர்மாணமானது 1792ம் ஆண்டு ஆரம்பித்தபோதிலும் ஜோர்ஜ் வோஷிங்டன் இம்மாளிகையில் வசிக்கவேயில்லை. ஏனெனில் இம்மாளிகையின் நிர்மாண வேலைகள் பூர்த்தியாகும் முன்னரே ஜோர்ஜ் வோஷிங்டன் 1799ம் ஆண்டு காலமாகிவிட்டார். வெள்ளை மாளிகை நிர்மாணப்பணிகள் 1800ம் ஆண்டளவில் நிறைவுற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் முதன்முதலில் வசித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ்(அமெரிக்காவின் 2வது ஜனாதிபதி) ஆவார். 1800ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Ø  1812ம் ஆண்டு அமெரிக்காவினை ஆக்கிரமித்த பிரிட்டன் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கட்டடங்களினை தீ வைத்து நாசப்படுத்தினர். இதன்போது வெள்ளை மாளிகையினையினையும் ஆகஸ்ட் 24, 1814ம் ஆண்டு தீ வைத்து சேதப்படுத்தினர்.  அமெரிக்காவின் 4வது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜேம்ஸ் மடிசன் 1815-1817ம் ஆண்டுவரை வெள்ளைமாளிகைக் கட்டிடத்தினை மீள நிர்மாணிக்க பாடுபட்டார்.

Ø  வெள்ளை மாளிகையினை வடிவமைத்த பிரதான கட்டிடக் கலைஞர் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் ஹோவன்.

Ø  132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை 55000 சதுர அடி பரப்பளவில் கொண்டுள்ளது. மேலும் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 28 எரிப்புகள், 8 மாடி படிக்கட்டுத்தொகுதிகள், 3 மின்னகர்த்திகள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

Ø  வெள்ளை மாளிகைக்கு 1891ம் ஆண்டு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

Ø  வெள்ளை மாளிகை வெளிச்சுற்றுப்பரப்புக்கு தீந்தை பூசுவதற்கு 570 கலன்கள் வர்ணப்பூச்சுக்கள் தேவையாகும்.

Ø  1901ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு"வெள்ளை மாளிகை(White House)" என்று பெயர் சூட்டியவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியாவார்.


Ø  வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பொதுமக்களுக்கு 1805ம் ஆண்டு சந்தர்ப்பத்தினைக் ஏற்படுத்திக்கொடுத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன். இவர் அமெரிக்காவின் 3வது ஜனாதிபதியாவார்.
                                                                                                                                                       9/11 தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளை மாளிகையினைப் பார்வையிட வருடாந்தம் 2மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தருகின்றனராம்.

Ø  வெள்ளை மாளிகைக்கு மோட்டார் இயந்திர வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்.

Ø  வெள்ளை மாளிகைக்கு ஆகாயவிமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 32வது ஜனாதிபதியாவார்.

Ø  வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த முதல் போப்பாண்டவர் 2ம் ஜோன் போல். இவர் 1979ம் ஆண்டு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  வெள்ளை மாளிகையில் மணமுடித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் ரைய்லர். இவர் அமெரிக்காவின் 10வது ஜனாதிபதியாவார்.

Ø  அமெரிக்க ஜனாதிபதிகளின் உறவினர்களின் இரண்டு திருமண நிகழ்வுகள் வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது; ரிச்சட் நிக்சனின் மகளின் திருமணம் மற்றும் பில் கிளிண்டனின் சகோதரரின் திருமணம்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

முயல், ஆமையின் முன்மாதிரி

முன்னொரு காலத்தில் முயல் மற்றும் ஆமையிடையே யாரால் வேகமாக செல்லமுடியும் என்ற வாதம் எழுந்தது. ஓட்டப் பந்தயத்தின் மூலமாக கண்டறிய தீர்மானித்தனர். போட்டி நடக்கும் தேதி, ஆரம்பிக்கும் இடம், முடியும் இடம் போன்றவைகளை முடிவு செய்தன. 

போட்டி தேதியும் வந்தது, போட்டியும் ஆரம்பித்தது. மிகவும் வேகமாக ஓடிய முயல் இலக்கை அடைய சிறிது தூரம் இருக்கும் போது, மிகத் தொலைவில் ஆமை வருவதைக் கண்டு சிறிது இளைப்பாற எண்ணியது. ஆனால் அசதியில் தூங்கிவிட்டது முயல். 

நிதானமாக வந்த ஆமை இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. விழித்து எழுந்த முயல், ஆமை வெற்றி பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. 

இதன் மூலம் நாம் அறிவது : நிதானமாகவும் விவேகத்துடனும் செய்யும் செயலில் நிச்சயமாக வெற்றியடைய முடியும். 

ஆனால் கதை இன்னமும் முடியவில்லை. சில சுவாரசியமான நிகழ்வுகளுடன் தொடர்கிறது கதை. 

தோற்றுப் போனதால் வருத்தமடைந்த முயல் தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. தனக்கு சாதகமாகவே அனைத்தும் நடக்கும் என்ற எண்ணம், தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைகனம், இவைதான் தன் தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்தது. 

இதனால் ஆமையை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது முயல். ஆமையும் போட்டிக்கு சம்மதித்தது. மறுபடியும் நடந்த போட்டியில், தன்னுடைய குறைகளை முன்பே அறிந்திருந்த முயல் வேகமாக சென்று இலக்கையடைந்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் நாம் அறிவது : சிந்தித்து செயல்படுவதன் மூலம் உறுதியாக வெற்றியடைய முடியும். 

இப்போதும் கதை முடியவில்லை. இம்முறை ஆமை தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. 

சிறிது நேரம் யோசித்த ஆமை, முயலை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது. பந்தயத்திற்கு சற்று வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தது. முயலும் போட்டிக்கு சம்மதித்தது. ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை. 

அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றது முயல். சிறிது நேரத்தில் அங்கு வந்தடைந்த ஆமை நிதானமாக ஆற்றை கடந்து இலக்கையடைந்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் நாம் அறிவது : நம்முடைய போட்டியாளரின் பலமறிந்து, பிறகு தன்னுடைய பலத்திற்கேற்ப போட்டியிடும் களத்தை முடிவு செய்ய வேண்டும். 

இன்னும் கதை தொடர்கிறது. இருவரும் போட்டிகளின் மூலமாக நல்ல நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து யோசித்து ஒரு தீர்மானத்தை அடைந்தனர். இறுதியாக, இருவரும் இணைந்து போட்டியில் பங்கு பெற முடிவு செய்தனர். 

போட்டி நாளன்று ஓடும் போது முயல் ஆமையை சுமந்து கொண்டு ஓடியது. நதியை அடந்ததும் ஆமை முயலை தன்னுடைய முதுகில் சுமந்து அக்கரையை அடைந்தது. அக்கரையில் இருந்து மீண்டும் முயல் ஆமையை சுமந்து சென்று இலக்கையடைந்தது. இருவரும் அதுவரை பெறாத சந்தோஷத்தையும், தன்னிறைவையும் பெற்றனர். 
  இதன் மூலம் நாம் அறிவது : தனித்தன்மையுடன் நல்ல ஆரோக்கியமான போட்டியாளருடன் போட்டியிடுவது பாராட்டுக்குரியது. மற்றவர்களுடன் இணைந்து ஒரு குழுவாக செயல் படாதவரைட்டால் மிகவும் எளிய முறையில் வெற்றி பெற முடியும். ஏனென்றால் அனைத்து செயல்களையும், சரிவர செய்ய இயலாது. குழுவாக இணைந்து செயல்படுவதென்பது, சூழ்நிலைக்கேற்ப திறமையானவர்கள் பொறுப்பேற்க முன்வருவதே. 

மேற்கூறிய கதையில் முயலோ ஆமையோ தோல்வியைக் கண்டு சோர்வடையவில்லை. முயல் தன்னுடைய தோல்விக்குப் பிறகு கடினமாக உழைத்தது. ஆமை தன்னுடைய தோல்விக்குப் பிறகு இயன்ற அளவு முயற்சி செய்தது மட்டுல்லாமல் போட்டியிடும் களத்தை மாற்றியமைத்தது. 

வாழ்வில் தோல்விகள் அடையும் போது கடின உழைப்பின் மூலம் அதனை வெற்றியாக மாற்ற முயல்வது ஓரு வகை. வழக்கமான சிந்தனையை மாற்றி முயன்று வெற்றி பெறுவது இன்னொரு வகை. 

சில நேரங்களில் இரு வகையிலும் முயற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்படும். இந்த உண்மையை முயலும் ஆமையும் உணர்ந்தன. நம்முடைய போட்டியாளருடன் போட்டியிடுவதை விடுத்து போட்டியாளருடன் இணைந்து பிரச்சினைகளை எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக இலக்கை அடைய முடியும். 

முயலும் ஆமையும் இணைந்து நமக்கு சொல்லும் பாடங்களாவன : 

* நிதானமாக செயல்படுதல் மூலம் வெற்றியை நிச்சயமாக அடைய முடியும். 

* யோசித்து விரைவாக செயல்படுபவர்கள், நிதானமாக செயல்படுபவர்களை விட எளிதில் வெற்றியை அடைய முடியும். 
குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலமாக வெற்றியை அடைவது நிச்சயம். 

* தோல்வியைக் கண்டு துவளக்கூடாது. 

* போட்டியாளருடன் எதிர்ப்பதை விடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகவேண்டும்.