"முளைக்கும் விதை உரைக்கும் உண்மை "
மரமாக இருந்தாலும் செடியாக இருந்தாலும் அது உருவாக அடிப்படையாய் அமைவது
விதை ஆகும் . அந்த விதையானது முளைக்கும் பொழுது கூர்ந்து கவனித்தால் ஆழமான
வாழ்க்கைத் தத்துவத்தை அறியமுடியும் .
விதையை பூமியில் போட்டால்
அது முளைக்கத் தொடங்கும் போது முதலில் வெளிவருவது அதன் வேர்ப்பகுதியாகும் .
வேர்ப்பகுதி நன்கு மண்ணில் ஊன்றிய பிறகு இலைப்பகுதி மெல்ல மெல்ல நிமிந்து
பின் வளரத் தொடங்கும் .
முதலில்
தன்னை நிறுத்திக் கொள்ள வேர்ப்பகுதியை பூமியில் இறக்கிய பின்னர் தான் ,
எந்த தாவரமும் இலைப்பகுதியை வெளிப்படுத்தி பின் ஒவ்வொரு இலையாக வளர வளர
வேர்ப்பகுதியையும் வளர்த்து பூமிக்குள் ஆழமாகவும் பரவலாகவும் செலுத்தி
தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் .
அதேபோல் மனிதன் தான் வாழ்வில்
வளர்ச்சியை தொடங்கும்போது , எடுத்தவுடன் உயரே வந்து விடவேண்டும் என்று
முயலாமல் . முதலில் தன்னை எந்த ஒரு துறையிலும் ஆழப் பதியச்செய்து தன்னை
நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் . பின்னர் தான் வளர்ச்சியை படிப்படியாக
உயர்த்திக் கொள்ள வேண்டும் .
ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் போதும்
தனது அடிப்படையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும் . செடியானது
தனது வேரை ஆழமாகவும் பரவலாகவும் பதியச் செய்வது போல , தான் வளருவதற்கு ஏற்ப
வளர்ச்சிக்கு அடிப்படையானவற்றை , அடிப்படையானவர்களை நம்மிடம் ஆழமாக
பற்றுகொள்ளச் செய்ய வேண்டும் . அடிப்படை வலுவற்ற எந்த வளர்ச்சியும் நிலை
பெறாது , நீடிக்காது . எனவே வளர்ச்சிக்கு முதல் கட்டம் அடிப்படையை முதலில்
அமைப்பது தான் என்பதை ஆழமாக மனதில் கொண்டு செயல் பட வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக