ஞாயிறு, 28 அக்டோபர், 2012

உலக அப்பிள் தினம் - (அக்டோபர் 21)


அக்டோபர் மாதம் 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்...

  • உலகளாவியரீதியில் 7500இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.



  • வாழைப்பழங்கள், தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.
  • கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
  • கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/ தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  •  அப்பிள் மரங்கள், ஒரு அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.
  • அப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.
  •  புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.
  •  அப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.
  •  அப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"
  • அப்பிள் மரங்கள் 4  5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.
 

  • தூய அப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.
  • அப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetinஅடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.
  • நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.
  • உலகில் அதிகளவில் அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.
  •  ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும். 




தினசரி ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவியரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.


***


1 கருத்து: