மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக்
கொள்வதற்காக அமைத்துக்கொண்ட உறைவிடங்களே குடியிருப்புகளாகும். ஒரு
குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ ஒன்ற சேர்ந்து வாழும்போது
குடியிருப்புகள் உருவாகின்றன. இயற்கையான கற்குகைகள், மரப்பொந்துகள்,
சிறுகூடாரங்கள், குடிசைகள், நிரந்தரமான வீடுகள், மாடிவீடுகள் என
பல்வேறுபட்ட வீட்டுவகைகளை குடியிருக்கும் வசிப்பிடங்களாக மனிதன்
பயன்படுத்தியுள்ளான்.
மனிதன் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டதன் நோக்கங்கள்
இயற்கையாக ஏற்படும் சில அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளல்.
விலங்குகள், கள்வாகளிடமிருந்து தம்மையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளல்.
அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்க்கையை நடாத்துதல்.
ஒரு குடியிருப்பில் காணப்படும் முக்கிய அம்சங்கள்:-
வீடுகள்
மக்கள் கூட்டம்
நிர்வாக அலுவலகம்
சேவை நிலையங்கள்
தொழிற்சாலைகள்
போக்குவரத்து வீதிகள்
மின்சார இணைப்புகள்
சுற்றுச்சூழல்(நிலம், நீர்)
3) குடியிருப்பின் வளர்ச்சி நிலைகள்:-
முன்னைய கற்கால யுகத்தில் வேட்டைக்காரர்களும், காய்கனிகள்
சேகரிப்போரும் மரப்பொந்துகள், கற்குகைகள் போன்ற தற்காலிக குடியிருப்புக்களை
பயன்படுத்தினர்.
நாடோடி மந்தைமேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் கைத்தொழில் மற்றும்
பயிர்ச்செய்கை தொடங்கிய பின்னர் குறைந்த அளவில் நிலையான குடியிருப்புகளை
அமைத்துக் கொண்டனர்.
விவசாயப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் பயிர்ச்செய்கையும்
விலங்குவேளான்மையும் ஆரம்பமாகியதால் நிலையான வீடுகளும் கிராமங்களும்
உருவாகுதல்.
நகரப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் கிராமிய வாழ்க்கை முறையிலிருந்து
நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறியவுடன் நகரக்குடியிருப்புகள் உருவாகுதல்.
17 ஆம் நூற்றாண்டின் பின்னர் 1750-1850 வரையிலான காலததில் கைத்தொழில்
புரட்சியுடன் நகரசனத்தொகையும், நகரங்களும் துரிதமாக வளர்ச்சியடைதல்.
20 நூற்றாண்டிலிருந்து அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளின் நகர
சனத்தொகை அதிகரித்தலும் முழு உலகினதும் நகர வளர்சி ஏற்பட்ட இயக்க நகர்க்
குடியிருப்புக் காலத்தில் பெருநகர்கள், கூட்டுநகாகள், பெருநகரத்தொகுதிகள்
என்றவாறாக நகர்கள் விருத்தியடைந்தன.
4) குடியிருப்புக்களின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:-
பௌதிக காரணிகள்:- தரைத்தோற்றம், காலநிலை, இயற்கை வளம்
சமூக பொருளாதார காரணிகள்:- விவசாயமும் நீர்ப்பாசனமும், கைத்தொழில், போக்குவரத்து, வர்த்தகம், அரசகொள்கை
5) குடியிருப்புகளின் வகைகள்:-
உலகில் காணப்படுகின்ற குடியிருப்பு வகைகளை பிரதானமாக இரண்டு
பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். கிராமிய குடியிருப்புகள்,
நகரக்குடியிருப்புகள் என அவை பிரதானமாக இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றன.
இவற்றை பிரதானமாக பிரிப்பதற்கு இங்கு அளவுகோல்களாக சனத்தொகை, சனத்தொகை
அடர்த்தி, பொருளாதார நடவடிக்கைகள், சேவைகள், நிலப்பயனபாடு,
வீடுகளுக்கிடையிலான தூரம், சமூகத் தொடர்புகள், அன்றாட நகர்வுகள் என்பன
பிரமாணங்களாக கொள்ளப்படுகின்றன.
கிராமியக்குடியிருப்புகளின் படிமுறை ஒழுங்கு பின்வருமாறு அமைகின்றது.
தனிமைப்படுத்தப்பட்ட வீடு அல்லது பண்ணை வீடு, குக்கிராமம், கிராமம்
நகரக்குடியிருப்புகளின் படிமுறை ஒழுங்கு பின்வருமாறு அமைகின்றது.
நகரம், மாநகரம், பெருநகர், கூட்டுநகர், நகர்த்தொகுதி.
6) கிராமியக்குடியிருப்புக்கும் நகரக்குடியிருப்பிற்கும் இடையிலான ஒப்பீடு:-
சனத்தொகை - கிராமக்குடியிருப்புகளின்; சனத்தொகை , நகரக் குடியிருப்புகளின சனத்தொகையை விட ஒப்பீட்டளவில் குறைவாகும்.
சனத்தொகை அடர்த்தி கிராமங்களின்; சனத்தொகை அடர்த்தியானது - நகரங்களின்
சனத்தொகை அடர்த்தியை விட குறைவாகக் காணப்படும். நகரங்களில் குறுகிய
நிலப்பரப்பில் அதிக குடியிருப்புகளை காணக்கூடியதாகவிருக்கும்.
பொருளாதாரம் - கிராமியக் குடியிரப்புக்களில் முதனிலைப் பொரளாதார
நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படுவதுடன், நகரக் குடியிருப்பகளில் இரண்டாம்,
மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படும்.
சேவைகள் - கிராமியக்குடியிப்புக்களில் சேவைவசதிகள் நகரப்பகுதிகளை விட
குறைவாகும். நகரக்குடியிருப்புகளில் கல்வி, சுகாதாரம், நிதி, வர்த்தகத்
துறைகளில் பல்வேறு சேவைகள் ஏராளமாக மையப்படுத்தப்பட்டுள்ளன.
நிலப்பயன்பாடு – கிராமியக்குடியிருப்புகளில் கட்டட நிர்மாணத்திற்கான
நிலப்பயன்பாடானது நகரக்குடியிருப்புக்களைவிட ஒப்பீட்டளவில் குறைவாகவும்
விவசாய நிலங்கள் அதிகமாகவும் காணப்படும். கிராமியக்குடியிருப்பில் திறந்த
நகர்கள் காணப்படுவதுடன், நகர குடியிருப்புகளில் செறிவான கட்டங்களை காணலாம்.
சமூகம் - சமூக மற்றும் கிராமங்களுக்கிடையிலான தூரத்தினைக் கவனத்தில்
கொள்ளும்போது கிராமங்களில் பௌதீகத் தூரம் அதிகமாகவும் சமூகத்தூரம்
குறைவாகவும் காணப்படும். நகரக்குடியிருப்புகளில் பௌதீகத்தூரம் கறைவாகவும்
சமூகத்தூரம் அதிகமாகவும் காணப்படும்.
7) கிராமியக் குடியிருப்புகள்:-
முதனிலை பொருளாதார நடவடிக்கைககளான பயிhச்செய்கை, விலங்கு வளர்ப்பு,
மீன்பிடி, வேட்டையாடுதல் மற்றும் காய்கனிகளை சேகரித்தல் ஆகியவற்றை
மேற்கொண்டு வாழ்க்கை நடாத்துவோர் வசிக்கும் பகுதிகள் கிராமியக்
குடியிருப்புகள் எனப்படுகின்றன. ஆனாலும் சில கிராமியக் குடியிரப்பகளில்
இரண்டாம் நிலை , மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும்
வசிக்கின்றனர். பெரும்பாலான கிராமியக் குடியிருப்புப் பகுதிகள்
வசிப்பிடங்களை கொண்ட பிரதேசம், பொருளாதார நடவடிக்கைப் பிரதேசம் என இரண்டு
பாகங்களாக பிரிந்து காணப்படும்.
8) உறுதிப்பாட்டினடிப்படையில் கிராமியக் குடியிருப்பின் வகைகள்:-
கிராமியக் குடியிருப்புகள் அவற்றின் உறுதிப்பாட்டினடிப்படையில்
தறகாலிகமான அரகுறை உறுதிப்பாடுடைய குடியிருப்புகள் எனவும், நிலையான
கிராமியக் குடியிருப்புகள் எனவும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
9) தற்காலிக அரைகுறை உறுதிப்பாடுடைய குடியிருப்புகள்:-
நிலையான குடியிருப்புகளில் வாழ்வதற்கு முன்னர் மனிதர் தற்காலிகமான
மற்றும் அரைகுறையான உறுதிப்பாடுடைய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். உணவு
தேடி காலத்திற்கு காலம் நகர்ந்து குடியேறுதல், இரைகிடைக்கும் இடங்களை
மாற்றுதல், இடத்திற்கிடம் மாறிச் சென்று மீன்பிடித்தல், சேனைப்
பயிர்ச்செய்கை, சேனைப் பயிhச்செய்கை, பருவக்காதலநிலை மாற்றம் சார்ந்த
இடர்கள் போன்ற காரணங்களினால் தற்காலிக மற்றும் அரைகுறையான கடியிரப்பக்
கோலங்கள் உருவாகியுள்ளன. இன்றும் கூட உலகின் சில பிரதேசங்களில் பெரும்பாலான
பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடாபுடைய தற்காலிகமான குடியிருப்புக்களை
காணக்கூடியதாகவுள்ளது.
10) நிலையான குடியிருப்புகள்:-
பெரும்பாலான காலங்களில் தொடர்ச்சியாக ஒரேயிடத்தில் அமைந்துள்ள
குடியிருப்புகள் நிலையான குடியிருப்புகள் என்றழைக்கப்படுகின்றன. தோற்றம் ,
அமைவிடம், பொருளாதார நடவடிக்கைகள், இடப்பரப்பு, சனத்தொகை, குடியிருப்புக்
கோலங்களின் தன்மை போன்ற பிரமாண்களுக்கமைய இவ்வாறான நிலையான குடியிருப்புகளை
வகைப்படுத்தலாம்.
ஆசிய நாடுகளின் நெல் விவசாயக் குடியிருப்புகள்;
• இலங்கையின் ஈரவலயக் கிராமங்கள்
• மத்திய மலைநாட்டின் பள்ளத்தாக்கு சார்ந்த கிராமங்கள்
• உலர் வயல குளத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள்
பெருந்தோட்ட அமைப்பில் தேயிலை, இறப்பர், கரும்பு போன்ற பயிர்ச்செய்கை
செய்யப்படும் பிரதேசங்களிலிலுள்ள குடியிருப்புகளில் முறையாக
திட்டமிடப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
11) கிராமியக் குடியிருப்புக் கோலங்கள்:-
குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பிடங்களும் கட்டடங்களும் பரம்பிக்
காணப்படுகின்ற விதம் குடியிருப்புக் கொலங்கள் என அழைக்கப்படுகின்றன.
அந்தவகையில் கிராமியக் குடியிருப்புகள் பரவியுள்ள விதத்தினடிப்படையில்
சிதறிய குடியிருப்புகள், கொத்தணிக் குடியிருப்புகள்,
நாடாக்குடியிருப்புகள், வளையவடிவிலானதும் பசுமையானதுமான குடியிருப்புகள்,
திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
பெரியளவிலான நிலப்பிரதேசத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்ட தனியான வீட்டு
அலகுகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் எனப்படும். உதாரணமாக அமேசன்
காட்டுப்பகுதிகளில் இயற்கை வளங்களில் தங்கியிருந்து வாழும் வீடுகள்.
பெரியளவிலான தனிநபர் பயிர்ச்செய்கை நிலத்தையண்டியதாக பரவலாக உள்ள வீடுகள் சிதறிய குடியிருப்புகள் எனப்படுகின்றன.
கட்டங்கள் ஒருங்கமைந்து காணப்படும் குடியிருப்புகள் கொத்தணிக்
குடியிருப்புகள் எனப்படுகின்றன. பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய
நாடுகளில் இவ்வடிவக் குடியிருப்புகளைக் காணலாம்.
வீதிகள், ஆற்றோரங்கள், கால்வாய்கள், ஒடுங்கிய பள்ளத்தாக்குகள்
ஆகியவற்றின் இருமருங்கிலும் நீளவாட்டில் வீடுகளும் வேறு கட்டங்களும்
அமைந்திருக்கும்போது நாடாக்குடியிருப்புகள் எனப்படுகின்றன.
ஓர் இடத்தை மையப்படுத்தியவாறு வட்டவடிவில் அமைக்கப்படுகின்ற
குடியிருப்புகள் வட்டவடிவக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. ஆபிரிக்க
நாடுகளில் பெரும்பாலும் இத்தகைய குடியிருப்புக்களைக் காணலாம்.
தற்போது புதிதாக கட்டப்பட்டு குடியிருப்புகள் திட்டமிடப்பட்ட
குடியிருப்புகளின் வகையைச் சாரும். குறிப்பாக சுனாமி அனர்த்தத்திற்கு
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக திட்டமிட்ட முறையில் அமைத்துக்
கொடுக்கப்பட்ட கிராமியக் குடியிருப்புகள் இத்தகையனவாகும்.
12) நகரக்குடியிருப்புகள்:-
சிறப்புப்பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் என
அழைக்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் பெருமளவிலான
சனத்தொகை திரட்சியும், கைத்தொழில், சேவை வசதிகளின் மையப்படுத்தப்பட்ட
தனடமையையும் கொண்டுள்ள குடியிருப்புகள் நகரக்குடியிருப்புகள்
எனப்படுகின்றன.
13) நகரக் குடியிருப்புகளின் அடிப்படையான பண்புகள்:-
நகரப்பகுதிகளில் கட்டங்களுக்குரிய நிலப்பயன்பாடு அதிகளவில்
காணப்படுவதனால் விவசாய நிலங்களுக்கான நிலப்பயன்பாட்டிற்குரிய நிலத்தின்
அளவு மிகக் குறைவாகக் காணப்படும். பிரதேசத்தின் அதிகமான பகுதிகளை
வீடுகளும், தொழிற்சாலைகளும் ஏணைய கட்டடத் தொகுதிகளும்
ஆக்கிரமித்திருக்கும்.
பல்வேறு பட்ட தொழில்நடவடிக்கைகள் நகரப்பகுதிகளில் செறிந்திருப்பதனால் பல்வேறு இனமதங்களைச் சேர்த்வர்கள் வசிக்கின்றனர்.
நகரசனத்தொகையானது கிராமியக் குடியிருப்புகளை விட அதிகரிப்பதனால் சனத்தொகை செறிவும் நகரப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
14) நகரக்குடியிருப்புக்களை சனத்தொகைக்கமைய வகைப்படுத்தல்:-
நகரக்குடியிருப்புக்களை வகைப்படுத்தவதற்கு சனத்தொகை, தொழிற்பாடு என்பன
பிரமாணங்களாகக் காணப்படுகின்ற அதேவேளை சனத்தொகையின் அடிப்படையிலான
வகைப்படுத்தலே பிரதானமாகக் காணப்படுகின்றது. அந்தவகையில்
சனத்தொகையினடிப்படையில் நகரங்கள் பிரதானமாக 5 பிரிவுகளாக
வகைப்டுத்தப்படுகின்றன.
சிறிய நகரங்கள் 2000 - 20 000 ( 20 ஆயிரத்திற்கு குறைவு)
இடைத்தர நகரங்கள் 20 000 - 100 000 (20 ஆயிரம்- 100 ஆயிரம்)
நகரங்கள் 100 000 - 1 000 000 (100 ஆயிரம் - 1 மில்லியன்)
மில்லியன் நகரங்கள் 1 000 000 -10 000 000(1 மில்லியன்- 10 மில்லியன்)
மாபெரும் நகரங்கள் 10 000 000 மேல் (10 மில்லியனும் மேலும்)
15) நகர வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்:-
நகரமானது அதனுடைய சனத்தொகை அளவும் பௌதீக ரீதியான நிலப்பரப்பு
விரிவாக்கத்திற்கும் ஏற்ப வளர்ச்சியடைந்து செல்கின்றது. அந்தவகையில்
நகரங்களில் வளர்ச்சியானது பின்வரும் ஒழுங்கில் காணப்படும்.
நகரம் (வுழறn ஊவைல) , பெருநகரம் (ஆநவசழிழடவையn) , கூட்டுநகர் (ஊழஅடிiயெவழைn) , நகர்த்தொகுதி (ஆநபயடழிழடளை)
16) நகரம்:-
மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பிரதேசத்தில் பெருமளவான சனத்தொகை ஒன்று
கூடுவதால் அதிகமான மக்கட் செறிவு இருக்கும் கனிய, கைத்தொழில் நிதி, கல்வி,
சுகாதார, நிர்வாக, தங்குமிடம் போன்ற பல்வேறு வேலைகள் மையப்படுத்தப்பட்ட
குடியிருப்புக்கள் நகரங்கள் அழைக்கப்படுகின்றன.
17) பெருநகரம் :-
துரிதமாக வளர்ச்சியடையும் பாரிய நகர்களைச் சுற்றி நகரப்புறங்களும்,
கிராமாந்திரங்களும் உருவாகின்றன. இவ்வாறு மத்திய நகரத்தைச் சுற்றி
உபநகரங்களும், அடுத்து சிறிய நகரங்களும் வளர்ச்சியடைகின்றபோது அவை
பெருநகரம் எனப்படும்.
பெருநகரப் பிரதேசம் ஒன்று உருவாவதற்கு பல காரணிகள் செல்வாக்கு
செலுத்துகின்றன. கைத்தொழில் புரட்சியின் பின்னர் விருத்தியடைந்த நாடுகளில்
கிராமிய பிரதேசங்களின் பாரியளவு சனத்தொகை நகரங்களுக்கு இடம் பெயர்ந்தன.
நகரங்களில் வதியும் மக்கள் நகரங்களின் சூழல் மாசடைவு, ஆள்ப்பாற்றாக்குறை,
காணிகளின் விலையேற்றம், வீட்டு வாடகை அதிகரித்துச் செல்லல், நகர சூழலில்
வாழ விரும்பாமை போன்ற காரணிகளால் நகர் எல்லைப்புறங்களில் (நகரிற்கு வெளியே)
குடிபெயர்ந்தனர். எனினும் அவர்களின் வேலைத்தளம் பிரதான நகரத்திலேயே
காணப்பட்டமையினால் நாளாந்தம் நகரத்திற்கு போக்குவர்த்து செய்ய வேண்டிய நிலை
ஏற்பட்டது. இதனால் போக்குவரத்திற்குசெலவு செய்யக் கூடிய மத்தியதர
வகுப்பினர், உயர் மட்டத்தினர் மாத்திரம் நகரங்களுக்கு வெளியே
இடம்பெயர்ந்தனர்.
புகையிரத வீதி விஸ்தரிப்பு, புகையிரத வீதிப் போக்குவரத்துக்கான
அனுமதிச்சீட்டு குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றால்
தொழிலாளர் வர்க்கத்தினரும் நகரத்திலிருந்து வெளியே வாழ முயற்சித்தார்கள்.
இதுபோன்ற நகரங்களில் வேலை செய்வோர் குடியமர்ந்த பிரதேசங்களில் உப நகர்கள்
உருவாக்கம் பெற்றன.
18) கூட்டு நகர்:-
பெருநகர்கள் படிப்படியே விரிவாகி இரு பெருநகர்கள் ஒன்றுடனொன்று
இணைவதால் தொடர்ச்சியாக வியாபிக்கும் நகர்ப்புறப்பண்புகளைக் கொண்ட பாரிய
பிரதேசம் உருவாகின்றது. இவ்வாறு பெருநகர்கள் ஒன்றுடனொன்று இணைவதால்
உருவாகும் வலயம் கூட்டுநகர்கள் என்றழைக்கப்படும்.
உதாரணம்: பாரிய இலண்டன் கூட்டுநகர், மேற்கு யோக்ஷயர்
19) நகர்த்தொகுதி:-
சில கூட்டுநகர்கள் பாதை வலையமைப்பினால் ஒன்றுடனொன்று தொடர்பு
கொள்வதால் நகர்த்தொகுதிகள் உருவாகின்றன. நகர்த்தொகுதிகளின் உருவாக்கம் நகர
குடியிருப்பு வளர்ச்சியின் உச்ச கட்ட சந்தர்ப்பமாகக் கருதப்படும்.
உதாரணம் :
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க், பால்ரிமோர் எனப்படும் தொகுதிகளையும்
இணைத்தவாறு பொஸ்தானிலிருந்து வாஷிங்டன் வரை விரிவாகிச் செல்லும்
நகர்த்தொகுதி, சிக்காகோ பீற்றர்ஸ்பேர்க் நகர்த்தொகுதி (சிஜிட்டிஸ்)
யப்பானின் டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ நகர்த்தொகுதி
சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது எனது Ex உதவியாக உள்ளது நன்றி
பதிலளிநீக்குhelp full...tnx a lot..
பதிலளிநீக்குSuperb explanation
பதிலளிநீக்கு