ஞாயிறு, 11 நவம்பர், 2012

கைத்தொழில் புரட்சி

18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உலகெங்கிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தன. இதனால் பரந்த சந்தைகள் கிடைக்கப்பெற்றமையும், சனத்தொகை பெருகிச் சென்றமையும் வியாபாரச் சமூகம் விருத்தியடைந்தமையும் உற்பத்தித்துறையில் பாரிய மாற்றங்களை வேண்டி நின்றான். இந்நிலையில் கைத்தொழில் புரட்சி முதலில் இடம் பெற்றது பிரித்தானியா நாட்டிலாகும்.

இவ்வாறான பல்வேறு காரணங்களால் விருத்தியுற்ற கைத்தொழிற் புரட்சி கீழ்வரும் தொழில் துறைகளில் இடம் பெற்றன. 

1. நெசவு
2. நிலக்கரி.
3. இரும்பு.

நெசவுக் கைத்தொழில் 



  • 1733 இல் ஜோன் கே என்பவரால் நெசவு இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
  • 1767 இல் ஜேம்ஸ் - அவ் கிரீஸ் என்பவரால் நூல் நூற்கும் ஸ்பினிங் ஜெனி எனும் இயந்திரம் கண்டறியப்பட்டது. 
  • றிச்சட் ஆக்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட நீர்ச்சட்டத்தால் கைகளினால் கருவியை சுழற்றுவதற்குப் பதிலாக நீரின் உதவியால் அதனை மேற்கொள்ள முடிந்தது. 
  • 1779 இல் சாமுவேல் குரோம்பட்ன் கண்டறிந்த மியூஸ் இயந்திரத்தால் நூல்நூற்றல் மேலும் வேகமடைந்தது ஜெனி, மியூஸ் இயந்திரங்களை இயக்க நீர்ச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 
  •  எட்மன்ட் காட்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட விசைத் தரியினால் உற்பத்தி செய்த துணியைப் போல் நான்கு மடங்கை ஒரு சிறுவனால் உற்பத்தி செய்ய இயலுமாயிருந்தது. 1785 இல் பாரிய நெசவாலை ஒன்று உருவாக்கப்பட்டது. 


இரும்புருக்குத் தொழில் 



கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் ஆயுத உற்பத்திக்கே இரும்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் இயந்திர சாதனங்களின் உற்பத்திக்காக இரும்பு பெருமளவு தேவைப்பட்டது.

  • 1730 இல் ஆபிரஹாம் டாப் என்பவரின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து இரும்புத்தாதை உருவாக்குவதற்கு விறகுக்குப் பதிலாக நிலக்கரியப் பயன்படுத்தக் கூடியதாயிரு ந்தது.
  • 1856 இல் பேஸ்மர் இரும்பை உருக்கும் போது உருவாகும் கழிவை அகற்றுவதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • 1831 இல் நீல்சன் என்பவர் கொத்தி உலையைக் கண்டறிந்ததால் சக்தி வாய்ந்த உலோகமான உருக்கின் உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 
  • 1846 இல் சீமன் என்பவர் திறந்த உலையை நிர்மாணித்தார். இவற்றால் அவசரமாகவும், அதிகமாகவும் இரும்பையும் உருக்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாயிருந்தது

ஆரம்ப காலத்தில் சுரங்கத்தினுள் தேங்கும் நீர் கைகளினாலேயே இறைக்கப்பட்டது. காணப்படும் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டப்பட்ட காற்று செலுத்தப்பட வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகள் இரண்டையும் 1712 நிவ் கோமான் என்பவர் கண்டறிந்த நீராவியால் இயங்கும் எஞ்சின் மூலம் தீர்த்துக் கொள்ளக்கூடியதாயிருந்தது.
1812 இல் ஹம்பறி டேவ்வால கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பான விளக்கால் நிக்கறிச் சுரங்கத் தொழில் பாதுகாப்பு மிக்கதாக மாறியது.

போக்குவரத்துத் துறையில் கைத்தொழிற்புரட்சி 


18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் பெருந்தெருக்களும் புகையிரதப் பாதைகளும் கால்வாய்களம் உருவாக்கப்பட்டன . 1811 இல் மெகடம் " என்பவரால் கர்பாதைகள் உருவாக்கப்பட்டன. மெகடம் முறையால் இங்கிலாந்திலும் ஸ்கொட்லாந்திலும் பரவலாகப் பாதைகள் அமைக்கப்பட்டன.

  • 1807 இல் ஜேம்ஸ் வோட்டின் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி அமெரிக்கரான ரொபட் புல்டன் " குரோடொட்" எனும் புகைப்படகை முதன் முதலில் ஓடவிட்டார்.
  • 1811 இல் பிரயாணிகளை ஏற்றிச் செல்லத்தக்க புகைக்கப்பலை ஹென்றி பெல் உருவாக்கினார். 
  • 1814 இல் ஜோர்ச் ஸ்டீவன்சன், நீராவியால் இயங்கும் புகையிரதத்தை ஓடவிட்டார். 
  • 1885 இல் ஜெர்மனியில் டெம்லரல் முதலாவது மோட்டார் வாகனம் கண்டறியப்பட்டது. 
  • 1903 இல் அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் விமானம் உருவாக்கப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையில் கைத்தொழிற்புரட்சியின் பங்களிப்பு 



  • 1840 இல் நாட்டில் எவ்விடத்திற்கும் ஒரு பென்ஸ் செலவில் கடிதமனுப்பும் சேவை உருவானது.
  • 1844 இல் அமெரிக்கரான சாமுவேல் மோஸ் தந்திச் சேவையை அறிமுகம் செய்தார். 
  • 1876 இல் அமெரிக்கரான கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார். 
  • 1895 இல் இத்தாலியரான மார்க்கோணி வானொலியை உலகிற்கு அறிமுகம் செய்தார் 
  • 1940 இல் ஜோன் லொகி பெயார்ட் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். 

கைத்தொழில் புரட்சியின் பரம்பல் 

18 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவில் ஆரம்பமான கைத்தொழில் புரட்சி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியை அடையும்போது உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி 20ஆம் நூற்றாண்டில் உலகையே ஆட்கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. 

***

1 கருத்து:

  1. வாசிக்க சிரமமாக உள்ளது டெம்ப்ளேட்டை மாற்றி வாசிக்க உதவுமாறு மாற்றவும்

    பதிலளிநீக்கு