வெள்ளி, 9 நவம்பர், 2012

கல்வி உலகின் பக்கம் முஸ்லிம்களை திசை திருப்பியவர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத்


இலங்கையில் தோன்றி மறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் பொருத்தமான சமூகப் பணியைப் புரிந்த பெருந்தகையாக மறைந்த தேச மான்ய கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இலங்கை வாழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் உறைந்திலங்குகின்றார்.


‘கல்வித்துறையில் முஸ்லிம்கள் விழிப்படையும் வரையும் நானுறங்கமாட்டேன்’ எனப் பொது மேடைகளில் உரையாற்றி வர்த்தக சமூக மென வர்ணிக்கப்பட்ட முஸ்லிம்களை கற்ற சமூகத்தினராக மாற்றினார். இந்நாட்டு அரசியல் மற்றும் கல்வித்துறைக்கும் குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கும் கம்பளை சாஹிராக் கல்லூரியின் எழுச்சிக்கும் அவராற்றிய பெருந்தொண்டுகள் காலத்தால் அழியாதவை.

எஸ்.எல்.எம். நெய்னா முஹம்மத் பாத்துமா நாச்சியார் தம்பதிகளின் புதல் வராக பதியுதீன் மஹ்மூத் மாத்தறையில் 1904 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனதூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி யிலும் அடுத்து கொழும்பு உவெஸ்லிக் கல்லூரி, மருதானை சாஹிராக் கல்லூரி என்பவற்றிலும் பயின்று உயர் கல்வியை இந்திய அலிகார் சர்வகலாசாலையில் பெற்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பன்மொழிகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றார்.

இந்தியாவில் கற்ற காலத்தில் பல பெரியார்களுடன் பழகும் வாய்ப்பு பதி யுதீன் மஹ்மூத்துக்கு ஏற்பட்டது. இவை அவரது எதிர்கால அரசியல் வாழ்விற்கு கட்டியம் வழங்கின. ஏகாதி பத்தியக் கொள்கையை வெறுத்ததன் நிமித்தம் இவர் பர்மாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில் 24 மணித் தியாலயத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார். இள வல் பரியின் துணிச்சலு க்கு அது ஒரு எடுத்துக் காட்டாகும்.

சமய, சமூக, கலாசார, அரசியல் விடயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டு வாலிப லீக் அமைப்பி னூடாக பொதுப் பணி களில் ஈடுபட்டார். கம்பளை சாஹிராக் கல்லூரியில் இணைந்து பின்னர் அக்கல்லூரியின் அதிபராகப் பதவியுயர்வு பெற்று தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார். இக்கல்லூரிக்கும் பொதுவாக தேசிய மற்றும் முஸ்லிம் கல்வித்துறைக்கும் கணிசமானளவு தொண்டுகளைப் புரிந்த பதியுதீன் மறைந்த பிரதமர் பண்டார நாயக்காவோடு இணைந்து அக்கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

இக்கட்சியை தாபிப்பதற்கான மையமாக கம்பளை சாஹிராக் கல்லூரியே விளங்கியது. 1956 இல் பண்டாரநாயக்கா அரசை அமைத்தார். அரசியலில் இணையு மாறு பண்டாரநாயக்கா பதியுதீனை வேண்டியும் அதனை மறுத்தார் பதி. கம்பளை சாஹிராக் கல்லூரியை பரிபூரணமிக்க கலைப்பீடமாக மாற்றி சமூகத்திடம் ஒப்படைப்பதே அவரது இலட்சியக் கனவாக இருந்தது. அதற்காக பண்டார நாயக்காவின் அரசி னைப் பயன்படுத்திக் கொண்டார். அம ரர் தஹநாயக்காவை கல்வியமைச்சராக சிபார்சு செய்து அவர் மூலமாக முஸ்லிம்கள் கல்வி வளம் பெற ஊற்று மூலமாகவும் அமைந்தார்.

பண்டாரநாயக் காவின் அரசியலில் ஏற்பட்ட மக்கள் புர ட்சி முஸ்லிம் கல்வி யிலும் மாற்றங்களை விளைவிக்க பதியு தீனுக்கு சாதகமாக அமைந்தது. பாட சாலைகளுக்கு முஸ்லிம் பெயரிடப்பட்டது. முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள், மெளலவி ஆசிரியர்கள் முஸ்லிம் மகா வித்தி யாலயம் சித்திலெவ் வையால் வித்திடப் பட்ட முஸ்லிம் கல்வி யைப் பணியை சேர். ராசிக் பரீத் வியாபிக்க அமரர் பதியுதீன் மஹ்மூத் அதனை பரிபூரணப் படுத்தினார்.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஓலைக்குடிசை யொன்றில் உருவாகி இன்று சகல வளங் களும் மிகுந்த முன்ன ணித் தேசிய பாடசாலை யாகவும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் சொத் தாகவும் கம்பளை சாஹிரா மிளிர அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. ஆசியாவில் கம்பளை சாஹிராவை ஒரு முஸ்லிம் கலாபீடமாக அவர் இலங்க வைத்தார். இதனை கடந்தகால வளர்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

கம்பளையில் ஏற்பட்ட ஏகப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து 16 ஆண்டு கள் கம்பளை சாஹிராவின் இமாலய வளர்ச்சிக்கு உதவிய இவர் இக்கல்லூரியில் இதுவரை பணிபுரிந்த அதிபர்களுள் நீண்டகாலம் அதிபராக பதவி புரிந்த அதிபர் எனும் சிறப்பையும் பெறுகின்றார். பண் டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலில் உருவான மாற்றங் கள் பதியையும் அரசியலில் பிரவேசிக்க வைத்தது. திருமதி பண்டாரநாயக்கா அரசை அமைத்தார். 1960 – 1965 வரையும் அடுத்து 1970 – 1977 வரையும் சுகாதார, ஒலிபரப்புத்துறை, மற்றும் கல்வியமைச்சராக பதியுதீன் பணிபுரிந்தார்.

தனது அமைச்சர் பதவிக்காலத்தில் பாகுபாடின்றி சீரிய பணிபுரிந்தார். இதனைப் பிற சமூகத்தினரும் நன்றியோடு ஏற்கின்றனர்.

சமய அடிப்படையிலான ஆசிரிய கலாசாலைகள் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய அரபுப் பீடங்கள் கணிசமான ளவு ஆசிரியர் நியமனங்கள் என அவரது சேவைகளைப் பட்டியலிடலாம். சமூக கலாசார மேம்பாடுகளுக்கும் மதிப்பளித்த பதி கம்பளை சாஹிராவில் பர்தா சீருடையை அறிமுகப்படுத்தினார். இன்று நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலை களினதும் சீருடையாக இப்பர்தாவுடை பரிணமிப்பது கண்கூடு.

கல்வியறிவு மிக்க தாய்மார்களாலேயே நற்பிரசைகளாக ஆளுமைமிக்கோராக பிள்ளைகளை வளர்த்திட முடியும் எனும் கருத்தில் கல்லூரிகளை நிறுவி அபிவிருத்தி செய்தார். கல்முனை பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆண்டாண்டு தோறும் கண்டுவரும் பெரும் அபிவிருத்தி அவரது தூரநோக்கினை நிறைவு செய்யும் என்பதில் ஐயமில்லை. இருந்தும் அவரது இதயமாகக் கொள்ளப்படும் கம்பளை சாஹிராக் கல்லூரி பின்னடையாது அதனது கடந்தகால வளர்ச்சிப் பரிமாணத்தை மீளப்பெற உதவுதல் சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

***


2 கருத்துகள்: