ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஓசோன் படைப் பாதுகாப்பும் அதன் அவசியமும்

நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக, அற்புதமாக மூடி வைத்திருக்கிறது. அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை, நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து, பறந்து, பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது. இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது; இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.
 
 வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன், ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %; கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %., ஹீலியம் 0.000524 %; மீத்தேன் .0000179 %; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv (0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது.  

ozone_layer

 
 ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம். 
 
 பொதுவாக பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது.

இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere). இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும். ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன.

அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000 டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான். சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது. இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.  

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவானபோது ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1,500,000,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன. உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்)பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.

   ozone_370ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும். 
   
 வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட. ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன். இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism) மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது. இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது.
 
 ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன. 1980களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில் (Spring season) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது. ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும் (Chloroflurocarbons) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.
 
 அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985ல் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின்போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது. ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4% என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

     மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள்,    சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன. 

   உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16. அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர். 1987ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.

   ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று Pக்களை முன் வைக்கின்றனர்.

1. Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.

2. People மக்கள்: அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.

3. Prosperity வளங்கள்: ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கும் பாதிப்பு உண்டு பண்ணும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.

 மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

2.   ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால்              போதுமானது.

3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.

6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.

7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும்.

8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.

9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.

10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.

11. குளிர் சாதன அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.

12. சிற்றுந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.

13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.

14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.

15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும்.

16. சிற்றுந்து, கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.

17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.

18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.

19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.

20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும்.

புதன், 21 நவம்பர், 2012

இலங்கையின் முதற் சற்றலைட்

இலங்கை கொடியை தாங்கிய முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில் வலம் வர இருக்கிறது. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாக்கப்பட்ட  தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். நாளை  வியாழக்கிழமை (2012.11.22) இலங்கை நேரப்படி மாலை 3.40 மணிக்கு  சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி - பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 03 ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.


***

செவ்வாய், 20 நவம்பர், 2012

மரியானா ஆழி


Mariana_trench_map உலகிலேயே மிகவும் ஆழமான இடம் மரியானா ஆழி ஆகும்.  இது பசுபிக் கடலில் உள்ளது. ஜப்பானுக்குத் தெற்கே, பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குக் கிழக்கே, நியூ கினி தீவுகளுக்கு வடக்கே, ஆரம் போன்ற ஒரு வளைவாக மரியானா தீவுகள் அமைந்து உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், தமது நாட்டு இளவரசி மரியானாவின் பெயரை, இந்தத் தீவுகளுக்குச் சூட்டினர்.

அந்தத் தீவுக்கூட்டத்தின் தெற்குக் கடைக்கோடிக் குட்டித் தீவு நாடுதான் குவாம். தற்போது அமெரிக்காவின் பிடிக்குள் உள்ளது. அங்கிருந்து தென்மேற்கில், சுமார் 300 மைல் தொலைவில், மரியானா நீள்வரிப் பள்ளம் (Mariana Trench) அமைந்து உள்ளது. அதன் ஆழம், 35,756 அடிகள் (10,898 மீட்டர்கள்) ஆகும். மரியானா தீவுக்கூட்டத்தை ஒட்டி அமைந்து உள்ளதால், அப்பெயர் பெற்றது.

இந்தப் பள்ளம், வளர்பிறை (Crescent) வடிவத்தில் நீண்டு அமைந்து உள்ளதால், நீள்வரிப்பள்ளம் (Trench) என்று அழைக்கப்படுகின்றது. இதன் தென்வடல் நீளம், சுமார் 2500 கிலோ மீட்டர்கள். அகலம், 69 கிலோமீட்டர்கள் மட்டுமே. அதற்கு உள்ளும், அறைகூவும் ஆழம் (Challenger Deep) என்ற ஒரு ஆழப் படுகுழி உள்ளது. உலகில் இதன் அமைவிடம், 11° 22.4'N, 142° 35.5'E.[2] ஆகும்.

Oceanic_trench_620

***

டைட்டானிக் கப்பல்


 

உலகம் முழுமையும், ஏன் உங்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெயர்தான் ‘டைட்டானிக்’.உலகத் திரைப்பட வரலாற்றில், வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி, பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளையும் வாங்கிக் குவித்த ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்; அல்லது, கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழிலும் வந்தது. அவ்வப்போது, தொலைக்காட்சிகளில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கிலாந்து நாட்டில், ‘வெள்ளை விண்மீன் வரிசை’ (White Star Line) என்ற கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது ‘டைட்டானிக்’ பயணிகள் சொகுசுக் கப்பல். 1910-11 காலகட்டத்தில், அயர்லாந்து நாட்டின் பெல்ஃபாஸ்ட் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. அன்றைய நாளில், உலகிலேயே அதிக வசதிகள் நிறைந்த, அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கக்கூடிய கப்பல், அதுதான். “எத்தகைய புயல், மழை வெள்ளத்திலும் இந்தக் கப்பல் கடலுள் மூழ்காது” என்று அந்த நிறுவனம் பெருமிதமாக அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கப்பலின் முதலாவது பயணத்தில் இடம் பெறுவதற்காகக் கடுமையான போட்டி நிலவியது. பயணச்சீட்டு கிடைக்காதவர்கள், எதையோ பறிகொடுத்தவர்கள் போல ஆனார்கள். இடம் கிடைத்தவர்கள், எதையோ சாதித்து விட்டதைப் போன்ற உணர்வுடன் கப்பலில் ஏறிக் கையசைத்தார்கள்.

1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் நாள், 2224 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் துவக்கியது டைட்டானிக். வடக்கு அட்லாண்டிக் கடலில், ஐந்து நாள்கள் மகிழ்ச்சியான பயணத்துக்குப் பின்னர், அமெரிக்கக் கரையை நெருங்கிக் கொண்டு இருந்தது கப்பல். இன்னும் 375 மைல்களைக் கடந்தால் கரையைத் தொடலாம்.

ஏப்ரல் 15 ஆம் நாள், முன்னிரவு 11.40 மணி. அன்றைய நாளை இன்பமாகக் கழித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்ற பயணிகள் கண் உறங்கத் தொடங்கி இருந்த நேரம். திடீரென ஏதோ ஒரு மோதல்; பலத்த அதிர்ச்சி பயணிகளைத் தாக்கியது.

ஆம்; அட்லாண்டிக் கடலில் மிதந்துகொண்டு இருந்த ஒரு பெரும் பனிப்பாறையில் கப்பல் மோதி விட்டது. அதனால், கப்பலில் பல இடங்களில் துளைகள் விழுந்தன. அந்த ஓட்டைகளின் வழியாகக் கடல் நீர் உள்ளே புகுந்தது; ஒவ்வொரு அறையாக நீர் நிரம்பியது; கொஞ்சம் கொஞ்சமாகக் கப்பல் கடலுள் மூழ்கத் தொடங்கியது.

கப்பலில் 20 உயிர் காப்புப் படகுகளே இருந்தன. உயிர் தப்புவதில் பெண்கள், குழந்தைகளுக்கு முதல் இடம் என்ற அடிப்படையில், அவர்கள் அதில் ஏற்றப்பட்டனர். அதற்குப்பிறகு, முதல் வகுப்புப் பயணிகளுள் சிலர் இடம் பிடித்தனர். இரண்டாம் வகுப்புப் பயணிகள்தாம் பெரும்பாலும் மாட்டிக்கொண்டனர்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் கழித்து, டைட்டானிக் கப்பல், 1514 பேர்களுடன் கடலுள் மூழ்கி மறைந்தது. உயிர்காப்புப் படகுகளில் ஏறிய 710 பேர்கள் உயிர் தப்பினர். 12,415 அடிகள் (3784 மீட்டர்) ஆழத்தில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டது. பாதுகாப்பான கப்பல் என்ற பெருமையுடன் பயணத்தைத் துவக்கியது; பாதுகாப்பற்ற பயணமாக மாறியது.


இதற்குப் பிறகுதான், உலக நாடுகள் விழித்துக்கொண்டு, 1914 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டைக் கூட்டி, கடல் பயணப் பாதுகாப்புக்கான விதிகளை வகுத்தன. International Convention for the Safety of Life at Sea (SOLAS). அவைதாம், இன்றைக்கும் உலகம் முழுமையும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் அவ்வப்போது தேவைக்கு ஏற்ற திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

டைட்டானிக் பற்றிய கதைகள், கட்டுரைகள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நீண்ட நெடுங்காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன. கடலுக்கு அடியில் கிடக்கின்ற அந்தக் கப்பலைத் தேடும் பணியில் பல நிறுவனங்கள், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தன. அதன் விளைவாக, 1985 ஆம் ஆண்டு, அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, கடலுள் மூழ்கிய எத்தனையோ கப்பல்கள், கடலின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த டைட்டானிக் கப்பலின் கதையோடு ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் இணைத்து ஒரு திரைப்படமாக எடுத்து வரலாறு படைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கின்ற அந்தக் கப்பலைக் காட்டுவார். அங்கிருந்துதான், படம் தொடங்குகின்றது. அதிலிருந்து, கப்பல் மூழ்கியபோது நடைபெற்ற உணர்ச்சிப் போராட்டங்களை, அந்தக் கடைசிக் கட்டக் காட்சிகளை, அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஜேம்ஸ் கேமரூன்.

***

புதன், 14 நவம்பர், 2012

112 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு

light_200

பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல்எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா? . . .
இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம். அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.
pulb_200அதுமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம். இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று.
அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நூற்றிப் பண்ணிரண்டு வருடங்களாகியும் (112) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம். இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
***

ஞாயிறு, 11 நவம்பர், 2012

கைத்தொழில் புரட்சி

18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உலகெங்கிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தன. இதனால் பரந்த சந்தைகள் கிடைக்கப்பெற்றமையும், சனத்தொகை பெருகிச் சென்றமையும் வியாபாரச் சமூகம் விருத்தியடைந்தமையும் உற்பத்தித்துறையில் பாரிய மாற்றங்களை வேண்டி நின்றான். இந்நிலையில் கைத்தொழில் புரட்சி முதலில் இடம் பெற்றது பிரித்தானியா நாட்டிலாகும்.

இவ்வாறான பல்வேறு காரணங்களால் விருத்தியுற்ற கைத்தொழிற் புரட்சி கீழ்வரும் தொழில் துறைகளில் இடம் பெற்றன. 

1. நெசவு
2. நிலக்கரி.
3. இரும்பு.

நெசவுக் கைத்தொழில் 



  • 1733 இல் ஜோன் கே என்பவரால் நெசவு இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
  • 1767 இல் ஜேம்ஸ் - அவ் கிரீஸ் என்பவரால் நூல் நூற்கும் ஸ்பினிங் ஜெனி எனும் இயந்திரம் கண்டறியப்பட்டது. 
  • றிச்சட் ஆக்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட நீர்ச்சட்டத்தால் கைகளினால் கருவியை சுழற்றுவதற்குப் பதிலாக நீரின் உதவியால் அதனை மேற்கொள்ள முடிந்தது. 
  • 1779 இல் சாமுவேல் குரோம்பட்ன் கண்டறிந்த மியூஸ் இயந்திரத்தால் நூல்நூற்றல் மேலும் வேகமடைந்தது ஜெனி, மியூஸ் இயந்திரங்களை இயக்க நீர்ச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 
  •  எட்மன்ட் காட்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட விசைத் தரியினால் உற்பத்தி செய்த துணியைப் போல் நான்கு மடங்கை ஒரு சிறுவனால் உற்பத்தி செய்ய இயலுமாயிருந்தது. 1785 இல் பாரிய நெசவாலை ஒன்று உருவாக்கப்பட்டது. 


இரும்புருக்குத் தொழில் 



கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் ஆயுத உற்பத்திக்கே இரும்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் இயந்திர சாதனங்களின் உற்பத்திக்காக இரும்பு பெருமளவு தேவைப்பட்டது.

  • 1730 இல் ஆபிரஹாம் டாப் என்பவரின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து இரும்புத்தாதை உருவாக்குவதற்கு விறகுக்குப் பதிலாக நிலக்கரியப் பயன்படுத்தக் கூடியதாயிரு ந்தது.
  • 1856 இல் பேஸ்மர் இரும்பை உருக்கும் போது உருவாகும் கழிவை அகற்றுவதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • 1831 இல் நீல்சன் என்பவர் கொத்தி உலையைக் கண்டறிந்ததால் சக்தி வாய்ந்த உலோகமான உருக்கின் உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 
  • 1846 இல் சீமன் என்பவர் திறந்த உலையை நிர்மாணித்தார். இவற்றால் அவசரமாகவும், அதிகமாகவும் இரும்பையும் உருக்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாயிருந்தது

ஆரம்ப காலத்தில் சுரங்கத்தினுள் தேங்கும் நீர் கைகளினாலேயே இறைக்கப்பட்டது. காணப்படும் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டப்பட்ட காற்று செலுத்தப்பட வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகள் இரண்டையும் 1712 நிவ் கோமான் என்பவர் கண்டறிந்த நீராவியால் இயங்கும் எஞ்சின் மூலம் தீர்த்துக் கொள்ளக்கூடியதாயிருந்தது.
1812 இல் ஹம்பறி டேவ்வால கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பான விளக்கால் நிக்கறிச் சுரங்கத் தொழில் பாதுகாப்பு மிக்கதாக மாறியது.

போக்குவரத்துத் துறையில் கைத்தொழிற்புரட்சி 


18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் பெருந்தெருக்களும் புகையிரதப் பாதைகளும் கால்வாய்களம் உருவாக்கப்பட்டன . 1811 இல் மெகடம் " என்பவரால் கர்பாதைகள் உருவாக்கப்பட்டன. மெகடம் முறையால் இங்கிலாந்திலும் ஸ்கொட்லாந்திலும் பரவலாகப் பாதைகள் அமைக்கப்பட்டன.

  • 1807 இல் ஜேம்ஸ் வோட்டின் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி அமெரிக்கரான ரொபட் புல்டன் " குரோடொட்" எனும் புகைப்படகை முதன் முதலில் ஓடவிட்டார்.
  • 1811 இல் பிரயாணிகளை ஏற்றிச் செல்லத்தக்க புகைக்கப்பலை ஹென்றி பெல் உருவாக்கினார். 
  • 1814 இல் ஜோர்ச் ஸ்டீவன்சன், நீராவியால் இயங்கும் புகையிரதத்தை ஓடவிட்டார். 
  • 1885 இல் ஜெர்மனியில் டெம்லரல் முதலாவது மோட்டார் வாகனம் கண்டறியப்பட்டது. 
  • 1903 இல் அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் விமானம் உருவாக்கப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையில் கைத்தொழிற்புரட்சியின் பங்களிப்பு 



  • 1840 இல் நாட்டில் எவ்விடத்திற்கும் ஒரு பென்ஸ் செலவில் கடிதமனுப்பும் சேவை உருவானது.
  • 1844 இல் அமெரிக்கரான சாமுவேல் மோஸ் தந்திச் சேவையை அறிமுகம் செய்தார். 
  • 1876 இல் அமெரிக்கரான கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார். 
  • 1895 இல் இத்தாலியரான மார்க்கோணி வானொலியை உலகிற்கு அறிமுகம் செய்தார் 
  • 1940 இல் ஜோன் லொகி பெயார்ட் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். 

கைத்தொழில் புரட்சியின் பரம்பல் 

18 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவில் ஆரம்பமான கைத்தொழில் புரட்சி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியை அடையும்போது உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி 20ஆம் நூற்றாண்டில் உலகையே ஆட்கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. 

***

சனி, 10 நவம்பர், 2012

ரைட் சகோதரர்கள்





'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுட மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள் '.

2003 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்கவின் வட கரோலினா கிட்டி ஹாக்கில் உள்ள கில் டெவில் கில் [Kill Devil Kill, Kitty Hawk, North Carolina] கடல்மேட்டுக் கரையில், நூறாண்டுகளுக்கு முன்பு 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் [Orville Wright] முதன்முதலில் பனிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து நிரூபித்த நிகழ்ச்சியை மறுமுறை அதேபோல் ஒரு மாடலைத் தயாரித்துப் பார்வையாளர்களுக்குச் செய்து காட்ட முயன்றார்கள்! அது ரைட் சகோதரர் கனவை, ஆழ்ந்த அந்தரங்க வேட்கையை மெய்ப்பித்த நிகழ்ச்சியை நினைவூட்டியதோடு, அமெரிக்க விடுதலைப் புத்துணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும் தோன்றியது! சரித்திரப் புகழ்பெற்ற அந்தப் பனிரெண்டு வினாடிகள் உலக ஆகாயப் போக்குவரத்திலும், அண்டவெளிப் பயணத்திலும் மாபெரும் புரட்சியை உண்டாக்கி விட்டது! விண்வெளிப் பயணத்துக்கு விதையிட்ட சரித்திரத் தீரர்கள் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்களின் நினைவாக கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் 1932 ஆம் ஆண்டு 60 அடி உயரமுள்ள கற்கோபுரம் ஒன்று 90 அடி மலை உச்சியில் கம்பீரமாக நிறுத்தப் பட்டுள்ளது.

பறக்கும் யுகத்தைத் திறந்து வைத்த படைப்பு மேதைகள்!

படைப்புக்குத் தேவை, ஆக்க உணர்வு ஒரு சதவீதம், வேர்வை சொட்டும் விடா முயற்சி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் என்று உலக ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார்! படிக்காத, பட்டம் பெறாத தாமஸ் ஆல்வா எடிஸனைப் போன்ற நிபுணத்துவ உழைப்பாளிகளின் அணியில் வருபவர் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். எடிஸனைப் போல் நூற்றுக் கணக்கான நூதனச் சாதனங்களைக் கண்டுபிடிக்கா விட்டாலும், பறக்கும் ஊர்தியை மட்டும் படைத்த ரைட் சகோதரர்களின் ஆக்கம் தரத்தில் எடிஸனின் படைப்புகளுக்கு நிகரானது! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்களின் ஆரம்ப வெற்றி நிகழ்ச்சியே, அறுபத்தி ஆறு ஆண்டுகள் கடந்து 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் அண்டவெளியில் பறந்து சந்திர மண்டலத்தில் தடம்பதிக்க அடிகோலியது! ஆர்வில், வில்பர் இருவரும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காமல், படிப்பை விட்டுத்தள்ளிச் சைக்கிள் மெக்கானிக்காகப் பணி புரிந்து வந்தவர்கள்!

முதன்முதலில் பறந்த கிட்டி ஹாக்கில் நூற்றாண்டுப் பாராட்டு விழா

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் சுமார் 35,000 பேர் நூறாண்டுப் பாராட்டு விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனர். 'ரைட் சகோதரர்களின் பறக்கும் விமானப் படைப்பு பரந்த இந்த உலகுக்குச் சொந்தமானது! ஆனால் அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவர்கள் 'என்று ஆர்வில், வில்பர் ஆகியோரைப் புகழ்ந்து, கடற்கரைத் திடல் நூறாண்டு நினைவு விழாவில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். விமானியும், நியூயார்க் ராச்செஸ்டர் பொறியியற் பேராசிரியருமான கெல்வின் கோசெஸ்பெர்கர் 1903 இல் ரைட் சகோதரர் செய்த ஒற்றை எஞ்சின் இரட்டைச் சுழலி ஊர்தியின் மாடலை அக்காலப் பொருட்களில் அமைத்து, அவர்கள் முதலில் பறந்து பயின்ற முறைகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அம்மாடலை ஓட்டிக் காட்டுகையில் பெருமழை உண்டாகி ஏதோ பழுதுகள் ஏற்பட்டு, ஊர்தி தரை விட்டு எழுந்து பறக்க முடியாமல் முடங்கிக் கொண்டது! முதல் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவருக்கும், அத்தோல்வி ஏமாற்றத்தை உண்டாக்கியது. அடுத்து இரண்டாம் முறையாக மறுபடியும் அப்பணியை முயல்வதாகத் திட்டம் இருந்தது.

அடுத்து சந்திரனில் கால்வைத்த இரண்டாவது விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் [Buzz Aldrin], சினிமா நடிகர் ஜான் டிரவோல்டா [John Travolta] ஆகியோர் இருவரும் பேசினார்கள். ஜனாதிபதி புஷ் அடுத்து நாசா திட்டமிடும் புதிய சந்திரப் பயணத்தை, அக்கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் புஷ் அன்று ஏனோ அதை வெளியிட விரும்பவில்லை!

1903 டிசம்பர் 17 ஆம் தேதி முதலாக ஆர்வில் ரைட் எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறக்க முடிந்தது! அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஊர்தி 59 வினாடிகள் பறந்து 852 அடி தூரம் சென்றது! அம்மூன்று முதல் முயற்சிகளும் இருபதாம் நூற்றாண்டின் புதிய படைப்புச் சாதனையாக சரித்திரத்தில் இடம் பெறுகின்றன.

வானில் பறக்க முயன்ற முன்னோடி வல்லுநர்கள்

1783-1785 ஆண்டுகளில் பிளான்ச்சார்டு [Blanchard] போன்ற பிரென்ச் நிபுணர்கள் வாயு பலூன்களில் பறந்து காட்டினர்! 1804-1848 ஆண்டுகளில் ஜியார்ஜ் கேய்லி [George Cayley], 1842 இல் ஸாமுவெல் ஹென்ஸன் [Samuel Henson], 1894 இல் பிரிட்டிஷ் நிபுணர் ஹிராம் மாக்ஸின் [Hiram Maxin] ஆகியோரும் எஞ்சின் ஊர்தியை அமைக்க முன்னோடியாக முயன்றவர்கள். 1898 ஆம் ஆண்டு பிரேஸில் வல்லுநர் ஆல்பர்ட் ஸன்டாஸ் துமான்ட் [Alberto Santos-Dumont] எஞ்சின் இணைத்த வாயுக்கப்பலில் [Powered Airship] பறந்து சென்று பாரிஸ் ஐஃபெல் கோபுரத்தை நான்கு தடவைகள் சுற்றிக் காட்டினார்!

ஆனால் 1891 ஆம் ஆண்டில் ஜெர்மெனியின் ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல இறக்கைகளைக் கொண்ட ஊர்திகளில் 2000 தடவை வெற்றிகரமாகப் பறந்ததாக அறியப்படுகிறது! ஆனால் 1896 இல் விமானக் கட்டுப்பாடு சீர்குலைந்து, ஊர்தி தரையில் விழுந்து லிலியென்தால் மாண்டு விட்டார்! பிரென்ச் அமெரிக்கரான ஆக்டேவ் சனூட் [Octave Chanute] ரைட் சகோதரர் காலத்தில் (1896-1901) பறக்கும் ஊர்திகளைப் பற்றி எழுதியும், முயன்று கொண்டும் இருந்தார். ஆக்டேவ் சனூட் எழுதிய 'பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ' [Progress of Flying Machines] நூலே ரைட் சகோதரர்களுக்கு ஆரம்ப கால உதவிப் புத்தகமாக அமைந்தது. அவர்கள் சனூட்டுடன் தமது பறப்பியல் அனுபவ நுணுக்கங்களை அடிக்கடிப் பகிர்ந்து தொடர்பு கொண்டிருந்தனர்.

ஆட்டோ லிலியென்தால்தான் ரைட் சகோதரர்களின் முதற் குரு! அவர்களது விமான வேட்கைக்கு முக்கிய காரணமானவர். ஆட்டோ லிலியென்தால் எழுதிய 'பறப்பியல் பிரச்சனை, பறப்பியல் உந்து சோதனைகள் ' [The Problem of Flying & Practical Experiments in Soaring] என்னும் நூலும், ஸாமுவெல் லாங்கிலி எழுதிய [Samuel Langley] 'பறப்பியல் யந்திரவியல் சோதனைகள், வாயு வளைபோக்கு ' [Experiments in Mechanical Flight & Aerodynamics] என்னும் நூலும், அவர்கள் 200 வித இறக்கைகளைச் சோதிக்க செய்த 'புயல் குகைச் ' [Wind Tunnel] சோதனைகளுக்கு உதவின.

வான மண்டலத்தில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல மேதைகள் தோல்வி யுற்ற போது, ரைட் சகோதரர்கள் மட்டும் முதலில் வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன! முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல் ' [Thrust], 'மேலெழுச்சி ' [Lift], 'திசைதிருப்பி ' [Rudder] எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு ' நுணுக்கத்தைக் கையாண்டவர்கள், ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு ஆயில் எஞ்சினைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில், வில்பர் இருவரும் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான வாயு வளைபோக்குள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் 12 H.P. ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் 30 mph வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தார்! 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது!

நவீன உலகில் விமானப் போக்குவரத்துகள் விருத்தியும் பெருக்கமும்

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டு, 1908 இல் அமெரிக்க ஈரோப்பிய விமானப் போக்குவரத்துகள் சீராக ஆரம்பமாயின. முதல் உலகப் போரில் [1914-1918] வானிலிருந்து குண்டு போட முதன்முதல் விமானங்கள் பயன்படுத்தப் பட்டன! 1939 முதல் சுழற்தட்டு எஞ்சின்கள் நீக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றல் மிஞ்சிய ஜெட் எஞ்சின்கள் விமானங்களைத் இழுத்துச் செல்கின்றன! 1903 இல் ரைட் சகோதரர் ஊர்தி 600 பவுண்டு எடை கொண்டிருந்தது! தற்கால பூதவுருப் புறாவான 747 போயிங் ஜம்போ ஜெட் விமானம் 500 நபர்களை ஏற்றிக் கொண்டு, 350 டன் எடையைத் ஏந்திக் கொண்டு, மணிக்கு 580 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது!

ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் பயணிகள் ஆகாய விமானத்தில் பறந்து செல்கிறார்கள்! 2002 ஆண்டில் மட்டும் 1.3 பில்லியன் நபர்கள் விமானங்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிகிறது! அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 4% வீதம் இப்போது மிகையாகி வருகிறது! விமானப் பயணத்தின் சிறப்பு பெருகி வரும் சமயத்தில், சென்ற 100 ஆண்டுகளில் விமானங்கள் பழுதாகி விழுந்து தகர்ந்து போய் 46,000 பேருக்கு மேற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்! ஆயினும் மக்கள் விமானப் பயணத்திற்குப் பயந்தது போய் அவற்றைப் புறக்கணிதாகவும் தெரியவில்லை!

கடந்த பல வருடங்களாக மணிக்கு 185 டன் எடையுடன் 1200 மைல் வேகத்தில், 140 பேர் பயணம் செய்யும் 'ஒலிமீறிய ஜெட் ' [Supersonic Jet] விமானங்களைப் பிரிட்டனும், பிரான்சும் ஈரோப்புக்கும் அமெரிக்கவுக்கும் இடையே அனுப்பி வந்தன. அவற்றில் பிரச்சனைகள், விபத்துகள் ஏற்பட்டுத் தற்போது நிரந்தரமாக நிறுத்தப் பட்டு விட்டன. 1965 இல் தயாரான அமெரிக்காவின் புதிய X-15 விமானம் பூமிக்கு மேல் 60 மைல் உயரத்தில், ஆறு மடங்கு ஒலி வேகத்தில் [Six times the Speed ofSound (Mach:6) (4380 mph)] பறந்து செல்கிறது! எதிர்காலத்தில் வரவிருக்கும் நாசாவின் ஸ்கிராம்ஜெட் விமானம் [NASA 's X-43C ScramJet Plane] 7 மடங்கு ஒலி வேகத்தில் [4800 mph] பாய்ந்து செல்லும் என்று அறியப்படுகிறது!

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஒரு சாதனையாக வரலாற்றில் இடம்பெறும், சந்திர மண்டல மனிதப் பயணத்துக்கு அடிகோலியவர் ரைட் சகோதரர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, எல்லையிலா மகிழ்ச்சி உண்டாகிறது!

வெள்ளி, 9 நவம்பர், 2012

தன்யூப் ஆறு (Danube River)



தன்யூப் ஆறு (அல்லது டான்யூப் ஆறு) ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமானதும், ஐரோப்பாவில் இரண்டாவது நீளம் கூடியதுமான ஆறு. இது ஜெர்மனியில் உள்ள கருப்புக் காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரெக் (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தன்யூப் ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், ருமேனியா, உக்ரேன் ஆகிய நாடுகளிலுள்ள தன்யூப் கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தற்போது உள்ளது போலவே தன்யூப் ஆறு பல நூற்றாண்டுகளாக முக்கியமான ஒரு அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், ரோமப் பேரரசின் நீண்ட கால முன்னிலை எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் எல்லைகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோசியா, செர்பியா, பல்கேரியா, ருமேனியா, மோல்டோவா, உக்ரேன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா, பொஸ்னியாவும் ஹெர்சகொவினாவும், மொண்டெனேகுரோ, மசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.

***

கல்வி உலகின் பக்கம் முஸ்லிம்களை திசை திருப்பியவர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத்


இலங்கையில் தோன்றி மறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் பொருத்தமான சமூகப் பணியைப் புரிந்த பெருந்தகையாக மறைந்த தேச மான்ய கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இலங்கை வாழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் உறைந்திலங்குகின்றார்.


‘கல்வித்துறையில் முஸ்லிம்கள் விழிப்படையும் வரையும் நானுறங்கமாட்டேன்’ எனப் பொது மேடைகளில் உரையாற்றி வர்த்தக சமூக மென வர்ணிக்கப்பட்ட முஸ்லிம்களை கற்ற சமூகத்தினராக மாற்றினார். இந்நாட்டு அரசியல் மற்றும் கல்வித்துறைக்கும் குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கும் கம்பளை சாஹிராக் கல்லூரியின் எழுச்சிக்கும் அவராற்றிய பெருந்தொண்டுகள் காலத்தால் அழியாதவை.

எஸ்.எல்.எம். நெய்னா முஹம்மத் பாத்துமா நாச்சியார் தம்பதிகளின் புதல் வராக பதியுதீன் மஹ்மூத் மாத்தறையில் 1904 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனதூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி யிலும் அடுத்து கொழும்பு உவெஸ்லிக் கல்லூரி, மருதானை சாஹிராக் கல்லூரி என்பவற்றிலும் பயின்று உயர் கல்வியை இந்திய அலிகார் சர்வகலாசாலையில் பெற்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பன்மொழிகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றார்.

இந்தியாவில் கற்ற காலத்தில் பல பெரியார்களுடன் பழகும் வாய்ப்பு பதி யுதீன் மஹ்மூத்துக்கு ஏற்பட்டது. இவை அவரது எதிர்கால அரசியல் வாழ்விற்கு கட்டியம் வழங்கின. ஏகாதி பத்தியக் கொள்கையை வெறுத்ததன் நிமித்தம் இவர் பர்மாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில் 24 மணித் தியாலயத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார். இள வல் பரியின் துணிச்சலு க்கு அது ஒரு எடுத்துக் காட்டாகும்.

சமய, சமூக, கலாசார, அரசியல் விடயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டு வாலிப லீக் அமைப்பி னூடாக பொதுப் பணி களில் ஈடுபட்டார். கம்பளை சாஹிராக் கல்லூரியில் இணைந்து பின்னர் அக்கல்லூரியின் அதிபராகப் பதவியுயர்வு பெற்று தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார். இக்கல்லூரிக்கும் பொதுவாக தேசிய மற்றும் முஸ்லிம் கல்வித்துறைக்கும் கணிசமானளவு தொண்டுகளைப் புரிந்த பதியுதீன் மறைந்த பிரதமர் பண்டார நாயக்காவோடு இணைந்து அக்கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

இக்கட்சியை தாபிப்பதற்கான மையமாக கம்பளை சாஹிராக் கல்லூரியே விளங்கியது. 1956 இல் பண்டாரநாயக்கா அரசை அமைத்தார். அரசியலில் இணையு மாறு பண்டாரநாயக்கா பதியுதீனை வேண்டியும் அதனை மறுத்தார் பதி. கம்பளை சாஹிராக் கல்லூரியை பரிபூரணமிக்க கலைப்பீடமாக மாற்றி சமூகத்திடம் ஒப்படைப்பதே அவரது இலட்சியக் கனவாக இருந்தது. அதற்காக பண்டார நாயக்காவின் அரசி னைப் பயன்படுத்திக் கொண்டார். அம ரர் தஹநாயக்காவை கல்வியமைச்சராக சிபார்சு செய்து அவர் மூலமாக முஸ்லிம்கள் கல்வி வளம் பெற ஊற்று மூலமாகவும் அமைந்தார்.

பண்டாரநாயக் காவின் அரசியலில் ஏற்பட்ட மக்கள் புர ட்சி முஸ்லிம் கல்வி யிலும் மாற்றங்களை விளைவிக்க பதியு தீனுக்கு சாதகமாக அமைந்தது. பாட சாலைகளுக்கு முஸ்லிம் பெயரிடப்பட்டது. முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள், மெளலவி ஆசிரியர்கள் முஸ்லிம் மகா வித்தி யாலயம் சித்திலெவ் வையால் வித்திடப் பட்ட முஸ்லிம் கல்வி யைப் பணியை சேர். ராசிக் பரீத் வியாபிக்க அமரர் பதியுதீன் மஹ்மூத் அதனை பரிபூரணப் படுத்தினார்.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஓலைக்குடிசை யொன்றில் உருவாகி இன்று சகல வளங் களும் மிகுந்த முன்ன ணித் தேசிய பாடசாலை யாகவும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் சொத் தாகவும் கம்பளை சாஹிரா மிளிர அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. ஆசியாவில் கம்பளை சாஹிராவை ஒரு முஸ்லிம் கலாபீடமாக அவர் இலங்க வைத்தார். இதனை கடந்தகால வளர்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

கம்பளையில் ஏற்பட்ட ஏகப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து 16 ஆண்டு கள் கம்பளை சாஹிராவின் இமாலய வளர்ச்சிக்கு உதவிய இவர் இக்கல்லூரியில் இதுவரை பணிபுரிந்த அதிபர்களுள் நீண்டகாலம் அதிபராக பதவி புரிந்த அதிபர் எனும் சிறப்பையும் பெறுகின்றார். பண் டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலில் உருவான மாற்றங் கள் பதியையும் அரசியலில் பிரவேசிக்க வைத்தது. திருமதி பண்டாரநாயக்கா அரசை அமைத்தார். 1960 – 1965 வரையும் அடுத்து 1970 – 1977 வரையும் சுகாதார, ஒலிபரப்புத்துறை, மற்றும் கல்வியமைச்சராக பதியுதீன் பணிபுரிந்தார்.

தனது அமைச்சர் பதவிக்காலத்தில் பாகுபாடின்றி சீரிய பணிபுரிந்தார். இதனைப் பிற சமூகத்தினரும் நன்றியோடு ஏற்கின்றனர்.

சமய அடிப்படையிலான ஆசிரிய கலாசாலைகள் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய அரபுப் பீடங்கள் கணிசமான ளவு ஆசிரியர் நியமனங்கள் என அவரது சேவைகளைப் பட்டியலிடலாம். சமூக கலாசார மேம்பாடுகளுக்கும் மதிப்பளித்த பதி கம்பளை சாஹிராவில் பர்தா சீருடையை அறிமுகப்படுத்தினார். இன்று நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலை களினதும் சீருடையாக இப்பர்தாவுடை பரிணமிப்பது கண்கூடு.

கல்வியறிவு மிக்க தாய்மார்களாலேயே நற்பிரசைகளாக ஆளுமைமிக்கோராக பிள்ளைகளை வளர்த்திட முடியும் எனும் கருத்தில் கல்லூரிகளை நிறுவி அபிவிருத்தி செய்தார். கல்முனை பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆண்டாண்டு தோறும் கண்டுவரும் பெரும் அபிவிருத்தி அவரது தூரநோக்கினை நிறைவு செய்யும் என்பதில் ஐயமில்லை. இருந்தும் அவரது இதயமாகக் கொள்ளப்படும் கம்பளை சாஹிராக் கல்லூரி பின்னடையாது அதனது கடந்தகால வளர்ச்சிப் பரிமாணத்தை மீளப்பெற உதவுதல் சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

***


மட்டக்களப்பு கல்லடிப் பாலம்



கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்
பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது.

சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924 இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது. இதற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் 1790 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் அமைக்கப்பட்டு 2013.03.21 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

- Long: 288.35m
- Wide: 16.5m
- Funded: Japan International Corporation Agency - (JICA)
- தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதல் பாலம்
- இலங்கையின் 3வது நீளமான பாலம்


***

மனித உடல் பற்றிய அதிசயத் தகவல்கள்


 பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

 மனித மூளையின் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.  900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில்  கார்பன் சத்து இருக்கிறது.

 ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

 ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும்ரத்தத்தின் அளவு 5 லிட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

 நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை  உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

 நமது இதயம் ஒரு நாளில் 1.03,689 முறை துடிக்கிறது.

 மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை 3000.

 உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

 கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

 கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

 மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது. மரணத்திற்குப் பிறகும் கூட ஒன்றுமே ஆகாது.


***

வெள்ளி, 2 நவம்பர், 2012

உலகின் முதல் அம்புயுலன்ஸ்


நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.