உலகிலேயே மிகவும் ஆழமான இடம் மரியானா ஆழி ஆகும்.
இது பசுபிக் கடலில் உள்ளது. ஜப்பானுக்குத் தெற்கே, பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குக்
கிழக்கே, நியூ கினி தீவுகளுக்கு வடக்கே, ஆரம் போன்ற ஒரு வளைவாக மரியானா
தீவுகள் அமைந்து உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளைக் கைப்பற்றிய
ஸ்பானியர்கள், தமது நாட்டு இளவரசி மரியானாவின் பெயரை, இந்தத் தீவுகளுக்குச்
சூட்டினர்.
அந்தத் தீவுக்கூட்டத்தின் தெற்குக்
கடைக்கோடிக் குட்டித் தீவு நாடுதான் குவாம். தற்போது அமெரிக்காவின்
பிடிக்குள் உள்ளது. அங்கிருந்து தென்மேற்கில், சுமார் 300 மைல் தொலைவில்,
மரியானா நீள்வரிப் பள்ளம் (Mariana Trench) அமைந்து உள்ளது. அதன் ஆழம்,
35,756 அடிகள் (10,898 மீட்டர்கள்) ஆகும். மரியானா தீவுக்கூட்டத்தை ஒட்டி
அமைந்து உள்ளதால், அப்பெயர் பெற்றது.
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக