ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

விசேட தேவையுடைய மாணவா்களும் கல்வியும்

ஏனையோhpலும் பாh;க்க விசேட கவனத்திற்குட்பட வேண்டிய நிலையிலுள்ள குறித்துக் காட்டத்தக்க தேவைப்பாடுடையோராக விளங்குவோh; விசேட தேவையூடையோராகக் கொள்ளப்படுகின்றனா;.
கல்விக்கான தனியாளது தேவைகள் சாதகமற்ற பின்னனியைக் கொண்டிருத்தலோ அல்லது உள மனவெழுச்சி சாh;ந்த உடல்சாh;ந்த இயலாமை அல்லது வளா;ச்சிக்கான செயலொழுங்கில் உயா; நிலைப்பட்ட தடைகளை எதிh; கொள்வோh; கல்வியில் விசேட தேவையூடையவா;களாகக் கொள்ளப்படுகின்றனா;.

பொதுவாக விசேட தேவையூடையோh; என்போhpல்  கற்றலில் சவால்களை எதிh; கொள்வோh; தொடா;பாடற் சவால்களை உடையோh; நடத்தை முரண்பாடு மனவெழுச்சிசாh; அழுத்த நிலமையூள்ளோh;  உடல் hPதியான குறைபாடுடையோh; உளாPpதியான குறைபாடுடையோh; என்போரைக் குறிப்பதாயூள்ளது. இத்தகையோருக்கு விசேடமான நுட்பங்களுடாகவோ அனுகு முறைகளுடாகவோ ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளுடாக கல்விக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தலசியமாகும்.
சமூகத்தின் ஒவ்வோh; மட்டத்திலும் நிலையிலும் விசேட தேவையூடையோh; அதிகளவில் காணப்படுகின்றனா;. இவா;கள் அனைவருக்கும் சிறந்த கல்வியினை வழங்குவதனூடாகவே அவா;கள் சாh;ந்த சமூகங்களும் மேம்பாடடையூம்.
உலகளாவிய மனித உhpமைகள் பிரகடனமானது ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானதம் சமத்துவமானதுமான கௌரவத்தினையூம் உhpமையினையூம் உடையவா; (சரத்து 1 ) என்பதோடு எந்தவிதமான தடைகளுக்கப்பாலும் இந்தக் கௌரவத்தினையூம் உhpமையினையூம் அடைந்து கொள்வதற்கான தகுதியூடையவா;கள் எனக் குறிப்பிடுகின்றது (சரத்து 2 ).

இந் நிலையில் நோக்கும் போது விசேட தேவையூடையவா;களும் எம்மைப் போல் அனைத்துவிதமான கௌரவத்தினையூம்  சமத்துவத்தினையூம் பெற உhpமையூடையவராகின்றனா;. எனினும் இத்தகைய நிலைகள் அனைத்து விசேட தேவையூடையோருக்கும் கிடைக்கின்றதா என நோக்கின் இங்கு அது இல்லை என்பது புலனாகும். இந்நிலையினை இல்லாது செய்வதற்கு நாம் எல்லோரும் பங்காற்ற வேண்டியது அவசியமாகும்.

பெரும்பாலான நாடுகளில் விசேட தேவையூடையோh; தொடா;பான சாpயான புள்ளி விபரங்கள் எவையூம் காணப்படுவதில்லை. இலங்கையைப் பொறுத்த வரையில் 24 பிரதேச செயலகப் பிhpவூகளில் மேற் கொள்ளப்பட்ட மாதிhp ஆய்வூகளின் பிரகாரம் 24 பிரதேசச் செயலகப் பிhpவூகளிலும் 6 தொடக்கம் 7 வீதமான குடித் தொகையினா;  விசேட தேவையூடையவா;களாக இனங் ;காணப்பட்டுள்ளனா;. இவ் மாதிhp ஆய்வானது சமூக மட்டத்திலான மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்காக மேற் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் சமூக சேவைத் திணைக்களத்தினது கணிப்பீட்டின்படி மொத்தக் குடித் தொகையில் 8 வீதமானோh; விசேட தேவையூடையவா;களாக இனங்காணப்பட்டுள்ளனா;. இன்று இலங்கையின் கல்வி முறையில் சமத்துவம் என்பது முக்கியப்படுத்தப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இது சாpவர இடம்பெறுவதில்லை . இதன் காரணமாக கிராமியப் பாடசாலைகளிலும் பாh;க்க நகரப் பாடசாலைகளில் ஒப்பீட்ளவில் சிறப்பான கல்வி வாய்ப்ப்புக்கள் உள்ளது என்ற மனநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருமளவூ தூரம் கடந்து சென்று கல்வி கற்பதற்கு விசேட தேவையூடைய மாணவா;களால் முடியாத நிலையூமுருவாகியூள்ளது. இது அவா;களிடையே மனத் தாக்கத்தினையூம் உண்டுபண்ணியூள்ளது

விசேட தேவையூடையோருக்கான கல்வியினை வழங்குவதற்கு கல்வியமைச்சின் விசேட கல்விப் பிhpவூ முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. பொதுவான பாடசாலைகளிலேயே இவா;களுக்கான கல்வியினை வழங்குவதில் முனைப்புக் காட்டி வருகின்றது. விசேட நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைப்பதனூடாக சாதாரன மாணவா;களுடன் சோ;ந்து கற்பதற்கான செயற்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனினும் இதற்கான ஒதுக்கீடுகளின் பற்றாக்குறையானது செற்பாடுகளை மேற் கொள்வதில் தடைகளை உண்டுபண்ணுகின்றது. ஆசிhpயா;களைப் பொருத்தமான முறையில் பயிற்றுவித்தல் ஊக்குவித்தல் என்பவற்றினைச் சிறந்த முறையில் வழங்க முடியாதுள்ளது.

இலங்கையில் கல்வி அமைச்சானது விசேட தேவையூடைய பிள்ளைகள் அனைவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க வேண்டும் பாடசாலைக் கற்றற் செயற்பாட்டில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எதிh;பாh;கையூடையதாகவேயூள்ளது என்பதோடு உட்படுத்தற் கல்விக்கான சாதகமான மனப் பாங்கினையூம் கொண்டுள்ளது. எனினும் நடைமுறையில் விசேட தேவையூடையோhpல் பெரும்பாலானவா;கள் பாடசாலைக் கல்வியைப் பெறச் செல்வதில்லை. அல்லது சிலா; பாடசாலைகளால் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை . இணைந்து கொண்டவா;களிலும் பலா; இடைவிலகும் நிலையூமுள்ளது. இதற்குப் பாடசாலையில் விசேட கல்விக்கான போதிய ஆதரவூ கிடைக்காமை பெற்றௌhpன் விருப்பமின்மை போக்குவரத்து வசதிகள் இன்மை விசேட தேவையூடைய பிள்ளைகளது கல்வி அனுகூலங்களை பெற்றௌh; உணராமை இவா;களது கல்விக்கான போதியளவூ வளங்களின்மை என்பனவூம்; கல்வியை இவா;களுக்குக் கிடைக்கச் செய்வதில் தடைகளை உண்டுபண்ணுகின்றது.

இலங்கையில் அங்கீகாpக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய கல்வியைக் கற்கக் கூடியதாக விசேட தேவையூடையோருக்கான கல்வி வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை  அவா;கள் ஏனைய மாணவா;கள் கல்வியைப் பெறுவது போலவே கல்வியைப் பெறும் வாய்ப்புள்ளது. முன்பள்ளிகள் ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் என்று எவையூமே விசேட தேவையூடையோருக்கென்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை எனினும் கட்புல செவிப்புல விசேட தேவையூடையோருக்கு என 1912 இல் இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையூம் நோக்கத்தக்கது. இந்த ஆண்டினை ஆரம்ப ஆண்டாகக் கொண்டே இவ் ஆண்டு (2012) விசேட கல்வி நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் “ விசேட தேவைக்குட்பட்டவா;களை கல்வியினால் வலுவூ+ட்டுவோம் “ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் 31.7மூ  ஆன விசேட தேவையூடைய பிள்ளைகள்  பாடசாலைக்குச் செல்பவா;களாக உள்ளனா; இலங்கையில் காணப்படுகின்ற விசேட தேவையூடையோhpல் 11 மூ ஆனவா;கள் தரம் 3 அல்லது அதற்குக் குறைவான கல்வியைப் பெறுபவா;களாகவூம் 14 மூ ஆனவா;கள் தரம் 4 தொடக்கம் 5 வரையான கல்வியைப் பெறுபவா;களாகவூம் 18 வீதமானவா;கள் 6 தொடக்கம் 8 வரையான கல்வியையூம் 11 மூ ஆனவா;கள் 9 தொடக்கம் 10 வரையான கல்வியையூம் 11 மூ ஆனொh; க.பொ.த.(சாஃத) கல்வியையூம் பெறுபவா;களாகவூள்ளன்h; எனினும் உயா; கல்வியைப் பெறுவோரது எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்கதாக அமைந்து காணப்படவில்லை .

விசேட தேவையூடையோருக்கான கல்வியானது சிறப்பானதாக வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இதன் மூலமே அவா;கள் பொருளாதார hPதியான சமூகாPதியான அந்தஸ்தினைப் பெறமுடியூம். உட்படுத்தற் கல்வியினைச் சிறப்பான முறையில் வழங்குவதனூடாகவே வகுப்பறையிலுள்ள ஒவ்வொருவரும் தமது பலம் பலவீனங்களை இனங்கண்டு கொள்ள முடியூம். ஒவ்வொருவரும் மற்றவா;கள் தொடா;பான உணா;வூகளை மதிப்பதற்கு வாய்ப்பு உருவாகும் என்பதோடு புதிய சினேக பூh;வ மனப்பாங்கினையூம் கட்டியெழுப்ப முடியூம். விசேட தேவையூடையோரைக் கல்வியில் வலுவூ+ட்டுவதற்காக விசேட கற்பித்தல் நுட்பங்கள் கருவிகள் பாட விடயங்கள் என்பவற்றௌடு தனித்துவமான கற்றல் முறையையூம் உள்ளடக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

விசேட தேவையூடையவா;களுக்கான கல்வியை வழங்குவதில் சவாலாயூள்ள விடயங்கள்.
1.கொள்கை உருவாக்கமும் நிறுவன அமைப்புருவாக்கமும்.
2.பாடசாலைக் காரணிகள்
3.கல்விசாh; ஊழியா; ஆட்சோ;ப்பும் பயிற்சியூம்
4.வெளியக ஆதரவூ
5.சமூக நோக்கு
6.வளத் தேவைகள்

வளா;முக நாடுகளில் விசேட தேவையூடையோhpன் எண்ணிக்கை அதிகாpப்பானது வறுமை சமூக ஒழுங்கிற்தாக்கம் குறிப்பாகக் குறை+யூ+ட்டம் நோய்த்தாக்கம் முழுமையான சுகாதார நிலை பேணப்படாமை முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படல் போன்ற பல நிலமைகளுக்குக் காரணமாயூள்ளது. எனவே விசேட தேவையூடைய பிள்ளை மீது விசேட கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும். அவா;களுக்குச் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அதனூடாகவே உடல் உள மனவெழுச்சிசாh; சமூகத் திறன்சாh; திறன்களை விசேட தேவையூடைய பிள்ளைகளிடம் வளா;க்க முடியும்.

அனைத்துலக எழுத்தறிவு நாள்


 
 அனைத்துலக எழுத்தறிவு நாள்
உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

உலகின் குடியிருப்பு (World settlement )



மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைத்துக்கொண்ட உறைவிடங்களே குடியிருப்புகளாகும். ஒரு குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ ஒன்ற சேர்ந்து வாழும்போது குடியிருப்புகள் உருவாகின்றன. இயற்கையான கற்குகைகள், மரப்பொந்துகள், சிறுகூடாரங்கள், குடிசைகள், நிரந்தரமான வீடுகள், மாடிவீடுகள்  என பல்வேறுபட்ட வீட்டுவகைகளை குடியிருக்கும் வசிப்பிடங்களாக மனிதன் பயன்படுத்தியுள்ளான்.
மனிதன் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டதன் நோக்கங்கள்
 
சூழலில் ஏற்படும் வெய்யில், மழை, பனி, வெப்பம், குளிர் என்பவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல்.
 
இயற்கையாக ஏற்படும் சில அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளல்.
 
விலங்குகள், கள்வாகளிடமிருந்து தம்மையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளல்.
 
அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்க்கையை நடாத்துதல்.
ஒரு குடியிருப்பில் காணப்படும் முக்கிய அம்சங்கள்:-
 
    வீடுகள்
    மக்கள் கூட்டம்
    நிர்வாக அலுவலகம்
    சேவை நிலையங்கள்
    தொழிற்சாலைகள்
    போக்குவரத்து வீதிகள்
    மின்சார இணைப்புகள்
    சுற்றுச்சூழல்(நிலம், நீர்)
3)    குடியிருப்பின் வளர்ச்சி நிலைகள்:-
    முன்னைய கற்கால யுகத்தில் வேட்டைக்காரர்களும், காய்கனிகள் சேகரிப்போரும் மரப்பொந்துகள், கற்குகைகள் போன்ற தற்காலிக குடியிருப்புக்களை பயன்படுத்தினர்.
 
    நாடோடி மந்தைமேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் கைத்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை தொடங்கிய பின்னர் குறைந்த அளவில் நிலையான குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.
 
    விவசாயப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் பயிர்ச்செய்கையும் விலங்குவேளான்மையும் ஆரம்பமாகியதால் நிலையான வீடுகளும் கிராமங்களும் உருவாகுதல்.
 
    நகரப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் கிராமிய வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறியவுடன் நகரக்குடியிருப்புகள் உருவாகுதல்.
 
    17 ஆம் நூற்றாண்டின் பின்னர் 1750-1850 வரையிலான காலததில் கைத்தொழில் புரட்சியுடன் நகரசனத்தொகையும், நகரங்களும் துரிதமாக வளர்ச்சியடைதல்.
 
    20 நூற்றாண்டிலிருந்து அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளின் நகர சனத்தொகை அதிகரித்தலும் முழு உலகினதும் நகர வளர்சி ஏற்பட்ட இயக்க நகர்க் குடியிருப்புக் காலத்தில் பெருநகர்கள், கூட்டுநகாகள், பெருநகரத்தொகுதிகள் என்றவாறாக நகர்கள் விருத்தியடைந்தன.
4)    குடியிருப்புக்களின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:-
    பௌதிக காரணிகள்:- தரைத்தோற்றம், காலநிலை, இயற்கை வளம்
    சமூக பொருளாதார காரணிகள்:- விவசாயமும் நீர்ப்பாசனமும், கைத்தொழில், போக்குவரத்து, வர்த்தகம், அரசகொள்கை
5)    குடியிருப்புகளின் வகைகள்:-
    உலகில் காணப்படுகின்ற குடியிருப்பு வகைகளை பிரதானமாக இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். கிராமிய குடியிருப்புகள், நகரக்குடியிருப்புகள் என அவை பிரதானமாக இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரதானமாக பிரிப்பதற்கு இங்கு அளவுகோல்களாக சனத்தொகை, சனத்தொகை அடர்த்தி, பொருளாதார நடவடிக்கைகள், சேவைகள், நிலப்பயனபாடு, வீடுகளுக்கிடையிலான தூரம், சமூகத் தொடர்புகள், அன்றாட நகர்வுகள் என்பன பிரமாணங்களாக கொள்ளப்படுகின்றன.
    கிராமியக்குடியிருப்புகளின் படிமுறை ஒழுங்கு பின்வருமாறு அமைகின்றது.
    தனிமைப்படுத்தப்பட்ட வீடு அல்லது பண்ணை வீடு, குக்கிராமம், கிராமம்
    நகரக்குடியிருப்புகளின் படிமுறை ஒழுங்கு பின்வருமாறு அமைகின்றது.
    நகரம், மாநகரம், பெருநகர், கூட்டுநகர், நகர்த்தொகுதி.
6)    கிராமியக்குடியிருப்புக்கும்  நகரக்குடியிருப்பிற்கும் இடையிலான ஒப்பீடு:-
    சனத்தொகை - கிராமக்குடியிருப்புகளின்; சனத்தொகை , நகரக் குடியிருப்புகளின சனத்தொகையை விட ஒப்பீட்டளவில் குறைவாகும்.
    சனத்தொகை அடர்த்தி கிராமங்களின்; சனத்தொகை அடர்த்தியானது - நகரங்களின் சனத்தொகை அடர்த்தியை விட குறைவாகக் காணப்படும். நகரங்களில் குறுகிய நிலப்பரப்பில் அதிக குடியிருப்புகளை காணக்கூடியதாகவிருக்கும்.
    பொருளாதாரம் - கிராமியக் குடியிரப்புக்களில் முதனிலைப் பொரளாதார நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படுவதுடன், நகரக் குடியிருப்பகளில் இரண்டாம், மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படும்.
    சேவைகள் - கிராமியக்குடியிப்புக்களில் சேவைவசதிகள் நகரப்பகுதிகளை விட குறைவாகும். நகரக்குடியிருப்புகளில் கல்வி, சுகாதாரம், நிதி, வர்த்தகத் துறைகளில் பல்வேறு சேவைகள் ஏராளமாக மையப்படுத்தப்பட்டுள்ளன.
    நிலப்பயன்பாடு – கிராமியக்குடியிருப்புகளில் கட்டட நிர்மாணத்திற்கான நிலப்பயன்பாடானது நகரக்குடியிருப்புக்களைவிட ஒப்பீட்டளவில் குறைவாகவும் விவசாய நிலங்கள் அதிகமாகவும் காணப்படும். கிராமியக்குடியிருப்பில் திறந்த நகர்கள் காணப்படுவதுடன், நகர குடியிருப்புகளில் செறிவான கட்டங்களை காணலாம்.
    சமூகம் - சமூக மற்றும் கிராமங்களுக்கிடையிலான தூரத்தினைக் கவனத்தில் கொள்ளும்போது கிராமங்களில் பௌதீகத் தூரம் அதிகமாகவும் சமூகத்தூரம் குறைவாகவும் காணப்படும். நகரக்குடியிருப்புகளில் பௌதீகத்தூரம் கறைவாகவும் சமூகத்தூரம் அதிகமாகவும் காணப்படும்.
7)    கிராமியக் குடியிருப்புகள்:-
    முதனிலை பொருளாதார நடவடிக்கைககளான பயிhச்செய்கை, விலங்கு வளர்ப்பு, மீன்பிடி, வேட்டையாடுதல் மற்றும் காய்கனிகளை சேகரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்க்கை நடாத்துவோர் வசிக்கும் பகுதிகள் கிராமியக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. ஆனாலும் சில கிராமியக் குடியிரப்பகளில் இரண்டாம் நிலை , மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் வசிக்கின்றனர். பெரும்பாலான கிராமியக் குடியிருப்புப் பகுதிகள் வசிப்பிடங்களை கொண்ட பிரதேசம், பொருளாதார நடவடிக்கைப் பிரதேசம் என இரண்டு பாகங்களாக பிரிந்து காணப்படும்.
8)    உறுதிப்பாட்டினடிப்படையில் கிராமியக் குடியிருப்பின் வகைகள்:-
    கிராமியக் குடியிருப்புகள் அவற்றின் உறுதிப்பாட்டினடிப்படையில் தறகாலிகமான அரகுறை உறுதிப்பாடுடைய குடியிருப்புகள் எனவும், நிலையான கிராமியக் குடியிருப்புகள் எனவும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
9)    தற்காலிக அரைகுறை உறுதிப்பாடுடைய குடியிருப்புகள்:-
    நிலையான குடியிருப்புகளில் வாழ்வதற்கு முன்னர் மனிதர் தற்காலிகமான மற்றும் அரைகுறையான உறுதிப்பாடுடைய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். உணவு தேடி காலத்திற்கு காலம் நகர்ந்து குடியேறுதல், இரைகிடைக்கும் இடங்களை மாற்றுதல், இடத்திற்கிடம் மாறிச் சென்று மீன்பிடித்தல், சேனைப் பயிர்ச்செய்கை, சேனைப் பயிhச்செய்கை, பருவக்காதலநிலை மாற்றம் சார்ந்த இடர்கள் போன்ற காரணங்களினால் தற்காலிக மற்றும் அரைகுறையான கடியிரப்பக் கோலங்கள் உருவாகியுள்ளன. இன்றும் கூட உலகின் சில பிரதேசங்களில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடாபுடைய தற்காலிகமான குடியிருப்புக்களை காணக்கூடியதாகவுள்ளது.
10)    நிலையான குடியிருப்புகள்:-
    பெரும்பாலான காலங்களில் தொடர்ச்சியாக ஒரேயிடத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் நிலையான குடியிருப்புகள் என்றழைக்கப்படுகின்றன. தோற்றம் , அமைவிடம், பொருளாதார நடவடிக்கைகள், இடப்பரப்பு, சனத்தொகை, குடியிருப்புக் கோலங்களின் தன்மை போன்ற பிரமாண்களுக்கமைய இவ்வாறான நிலையான குடியிருப்புகளை வகைப்படுத்தலாம்.
    ஆசிய நாடுகளின் நெல் விவசாயக் குடியிருப்புகள்;
•    இலங்கையின் ஈரவலயக் கிராமங்கள்
•    மத்திய மலைநாட்டின் பள்ளத்தாக்கு சார்ந்த கிராமங்கள்
•    உலர் வயல குளத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள்
    பெருந்தோட்ட அமைப்பில் தேயிலை, இறப்பர், கரும்பு போன்ற பயிர்ச்செய்கை செய்யப்படும் பிரதேசங்களிலிலுள்ள குடியிருப்புகளில் முறையாக திட்டமிடப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
11)    கிராமியக் குடியிருப்புக் கோலங்கள்:-
    குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பிடங்களும் கட்டடங்களும் பரம்பிக் காணப்படுகின்ற விதம்  குடியிருப்புக் கொலங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்தவகையில் கிராமியக் குடியிருப்புகள் பரவியுள்ள விதத்தினடிப்படையில் சிதறிய குடியிருப்புகள், கொத்தணிக் குடியிருப்புகள், நாடாக்குடியிருப்புகள், வளையவடிவிலானதும் பசுமையானதுமான குடியிருப்புகள், திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
    பெரியளவிலான நிலப்பிரதேசத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்ட தனியான வீட்டு அலகுகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் எனப்படும். உதாரணமாக அமேசன் காட்டுப்பகுதிகளில் இயற்கை வளங்களில் தங்கியிருந்து வாழும் வீடுகள்.
    பெரியளவிலான தனிநபர் பயிர்ச்செய்கை நிலத்தையண்டியதாக பரவலாக உள்ள வீடுகள் சிதறிய குடியிருப்புகள் எனப்படுகின்றன.
    கட்டங்கள் ஒருங்கமைந்து காணப்படும் குடியிருப்புகள் கொத்தணிக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இவ்வடிவக் குடியிருப்புகளைக் காணலாம்.
    வீதிகள், ஆற்றோரங்கள், கால்வாய்கள், ஒடுங்கிய பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் இருமருங்கிலும் நீளவாட்டில் வீடுகளும் வேறு கட்டங்களும் அமைந்திருக்கும்போது நாடாக்குடியிருப்புகள் எனப்படுகின்றன.
    ஓர் இடத்தை மையப்படுத்தியவாறு வட்டவடிவில் அமைக்கப்படுகின்ற குடியிருப்புகள்  வட்டவடிவக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலும் இத்தகைய குடியிருப்புக்களைக் காணலாம்.
    தற்போது புதிதாக கட்டப்பட்டு குடியிருப்புகள் திட்டமிடப்பட்ட குடியிருப்புகளின் வகையைச் சாரும். குறிப்பாக சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக திட்டமிட்ட முறையில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கிராமியக் குடியிருப்புகள் இத்தகையனவாகும்.
12)    நகரக்குடியிருப்புகள்:-
    சிறப்புப்பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் பெருமளவிலான சனத்தொகை திரட்சியும், கைத்தொழில், சேவை வசதிகளின் மையப்படுத்தப்பட்ட தனடமையையும் கொண்டுள்ள குடியிருப்புகள் நகரக்குடியிருப்புகள் எனப்படுகின்றன.
13)    நகரக் குடியிருப்புகளின் அடிப்படையான பண்புகள்:-
    நகரப்பகுதிகளில் கட்டங்களுக்குரிய நிலப்பயன்பாடு அதிகளவில் காணப்படுவதனால் விவசாய நிலங்களுக்கான நிலப்பயன்பாட்டிற்குரிய நிலத்தின் அளவு மிகக் குறைவாகக் காணப்படும். பிரதேசத்தின் அதிகமான பகுதிகளை வீடுகளும், தொழிற்சாலைகளும் ஏணைய கட்டடத் தொகுதிகளும் ஆக்கிரமித்திருக்கும்.
    பல்வேறு பட்ட தொழில்நடவடிக்கைகள் நகரப்பகுதிகளில்  செறிந்திருப்பதனால் பல்வேறு இனமதங்களைச் சேர்த்வர்கள் வசிக்கின்றனர்.
    நகரசனத்தொகையானது கிராமியக் குடியிருப்புகளை விட அதிகரிப்பதனால் சனத்தொகை செறிவும் நகரப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
14)    நகரக்குடியிருப்புக்களை சனத்தொகைக்கமைய வகைப்படுத்தல்:-
    நகரக்குடியிருப்புக்களை வகைப்படுத்தவதற்கு சனத்தொகை, தொழிற்பாடு என்பன பிரமாணங்களாகக் காணப்படுகின்ற அதேவேளை  சனத்தொகையின் அடிப்படையிலான வகைப்படுத்தலே பிரதானமாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் சனத்தொகையினடிப்படையில் நகரங்கள் பிரதானமாக 5 பிரிவுகளாக வகைப்டுத்தப்படுகின்றன.
    சிறிய நகரங்கள்      2000 - 20 000 ( 20 ஆயிரத்திற்கு குறைவு)
    இடைத்தர நகரங்கள்   20 000 - 100 000 (20 ஆயிரம்- 100 ஆயிரம்)
    நகரங்கள்           100 000 - 1 000 000 (100 ஆயிரம் - 1 மில்லியன்)
    மில்லியன் நகரங்கள்   1 000 000 -10 000 000(1 மில்லியன்- 10 மில்லியன்)
    மாபெரும் நகரங்கள்    10 000 000 மேல் (10 மில்லியனும் மேலும்)
15)    நகர வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்:-
    நகரமானது அதனுடைய சனத்தொகை அளவும் பௌதீக ரீதியான நிலப்பரப்பு விரிவாக்கத்திற்கும் ஏற்ப வளர்ச்சியடைந்து செல்கின்றது. அந்தவகையில் நகரங்களில் வளர்ச்சியானது பின்வரும் ஒழுங்கில் காணப்படும்.
    நகரம் (வுழறn ஊவைல) , பெருநகரம் (ஆநவசழிழடவையn)  , கூட்டுநகர் (ஊழஅடிiயெவழைn) , நகர்த்தொகுதி (ஆநபயடழிழடளை)
16)    நகரம்:-
    மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பிரதேசத்தில் பெருமளவான சனத்தொகை ஒன்று கூடுவதால் அதிகமான மக்கட் செறிவு இருக்கும் கனிய, கைத்தொழில் நிதி, கல்வி, சுகாதார, நிர்வாக, தங்குமிடம் போன்ற பல்வேறு வேலைகள் மையப்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் நகரங்கள் அழைக்கப்படுகின்றன.
17)    பெருநகரம் :-
    துரிதமாக வளர்ச்சியடையும் பாரிய நகர்களைச் சுற்றி நகரப்புறங்களும், கிராமாந்திரங்களும் உருவாகின்றன. இவ்வாறு மத்திய நகரத்தைச் சுற்றி உபநகரங்களும், அடுத்து சிறிய நகரங்களும் வளர்ச்சியடைகின்றபோது அவை பெருநகரம் எனப்படும். 
    பெருநகரப் பிரதேசம் ஒன்று  உருவாவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.  கைத்தொழில் புரட்சியின் பின்னர் விருத்தியடைந்த நாடுகளில் கிராமிய பிரதேசங்களின் பாரியளவு சனத்தொகை நகரங்களுக்கு இடம் பெயர்ந்தன.  நகரங்களில் வதியும் மக்கள் நகரங்களின் சூழல் மாசடைவு, ஆள்ப்பாற்றாக்குறை, காணிகளின்  விலையேற்றம், வீட்டு வாடகை அதிகரித்துச் செல்லல், நகர சூழலில் வாழ விரும்பாமை போன்ற காரணிகளால் நகர் எல்லைப்புறங்களில் (நகரிற்கு வெளியே) குடிபெயர்ந்தனர். எனினும் அவர்களின் வேலைத்தளம் பிரதான நகரத்திலேயே காணப்பட்டமையினால் நாளாந்தம் நகரத்திற்கு போக்குவர்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனால் போக்குவரத்திற்குசெலவு செய்யக் கூடிய மத்தியதர வகுப்பினர், உயர் மட்டத்தினர் மாத்திரம் நகரங்களுக்கு வெளியே இடம்பெயர்ந்தனர்.
    புகையிரத வீதி விஸ்தரிப்பு, புகையிரத வீதிப் போக்குவரத்துக்கான அனுமதிச்சீட்டு குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றால் தொழிலாளர் வர்க்கத்தினரும் நகரத்திலிருந்து வெளியே வாழ முயற்சித்தார்கள். இதுபோன்ற நகரங்களில் வேலை செய்வோர் குடியமர்ந்த பிரதேசங்களில் உப நகர்கள் உருவாக்கம் பெற்றன.
18)    கூட்டு நகர்:-
    பெருநகர்கள் படிப்படியே விரிவாகி இரு பெருநகர்கள் ஒன்றுடனொன்று இணைவதால் தொடர்ச்சியாக வியாபிக்கும் நகர்ப்புறப்பண்புகளைக் கொண்ட பாரிய பிரதேசம் உருவாகின்றது.  இவ்வாறு பெருநகர்கள் ஒன்றுடனொன்று இணைவதால் உருவாகும் வலயம் கூட்டுநகர்கள் என்றழைக்கப்படும்.
    உதாரணம்: பாரிய இலண்டன் கூட்டுநகர், மேற்கு யோக்ஷயர்
 
19)    நகர்த்தொகுதி:-
    சில கூட்டுநகர்கள் பாதை வலையமைப்பினால் ஒன்றுடனொன்று தொடர்பு கொள்வதால் நகர்த்தொகுதிகள் உருவாகின்றன. நகர்த்தொகுதிகளின் உருவாக்கம் நகர குடியிருப்பு வளர்ச்சியின் உச்ச கட்ட சந்தர்ப்பமாகக் கருதப்படும்.
    உதாரணம் :
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க், பால்ரிமோர் எனப்படும் தொகுதிகளையும் இணைத்தவாறு பொஸ்தானிலிருந்து வாஷிங்டன் வரை விரிவாகிச் செல்லும் நகர்த்தொகுதி,   சிக்காகோ பீற்றர்ஸ்பேர்க் நகர்த்தொகுதி (சிஜிட்டிஸ்)
 யப்பானின் டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ நகர்த்தொகுதி

வியாழன், 25 ஜூலை, 2013

வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்!

பள்ளிக்கூடம் போகும்வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும் போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம்.

நெஞ்சங்களில் படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை.

வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம்.

மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் – குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த...

இதே புலம்பல் தான் தினந்தோறும் அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒரு நாள் அணையும் ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம் ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும்...

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும் அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத்தாய் நாடு சென்றால் மட்டும் வாலிபங்கள் துள்ளும்.

வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டிடங்களை காணுகிறோம் நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்...

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம் அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது சுமைகளை இறக்கி வைக்க முடியாமல்
சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்...

சனி, 20 ஜூலை, 2013

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

 
அகழ்வுப் பிரிவின் மூலம் இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் வரலாற்றுக்கு முற்பட்ட மரபுரிமை இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன் பரவிச் செல்கின்றது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்போது செம்மண், மணல் படிமங்கள் விரிவடைந்து சென்ற இலங்கையின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்பிரதேசம் மிகமுக்கியமானதாகும். 1972ஆம் ஆண்டில் புந்தல, பத்திராஜவெல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட மனித குடியேற்றத்திட்டங்களின் முக்கியமான இரண்டு காலகட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  1. மத்திய புராதன கற்காலத்திற்குரிய அதாவது, இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித வர்க்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கு மானிட எச்சங்கள் கிடைக்கவில்லை.
  2. இற்றைக்கு சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய மானிடக் குடியேற்றத்திட்ட காலகட்டம், இது மத்திய கற்காலத்திற்குரியதாகும். மானிடர்களின் அல்லது விலங்குகளின் எச்சங்கள் இல்லாவிட்டாலும்கூட கேத்திரகணித வடிவுடைய நுண்ணிய கற்கருவிகள் பெருந்தொகையாகக் கிடைத்துள்ளன.
அத்துடன் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளில் நவீன மானிடர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மானிடர் தொடர்பான சந்தேகமற்ற காரணிகள் குகை குடியேற்றத்திட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மானிடனின் வாழ்க்கை முறை, வித்தை முறைகள், தொழில்நுட்பம் போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாய்வுப் பணிகள் முதல் முறையாக 1979ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதன்போது மூன்று கற்குகைகள் அகழ்வுக்குட்படுத்தப்பட்டன.
  • குருவிட்ட பட்டதொம்ப குகை.
  • ஹொரண பாஹியன் குகை.
  • கேகாலை சாம்பல் குகை.
இவ்வகழ்வுக் கருத்திட்டங்களின் பெறுபேறுகள் கலாநிதி சிரான் தெரணியகல அவர்களின் "The Prehistory of Sri Lanka" மற்றும் கலாநிதி உக்கியக விஜயபால அவர்களின் "New light on the prehistory of Sri Lanka" ஆகிய நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகவல்களை காலத்திருத்தம் செய்வதற்காக 2005ஆம் ஆண்டில் பட்டதொம்ப குகை, கித்துல்கல பெலி குகை, பெல்லன்பெந்தி பெலஸ்ஸ போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்பாக, குறிப்பாக கரையோர ஈரவலயத்தில் கற்குகைகள் சார்ந்த ப்ளயொஸ்டசீன காலம் முதல் மத்திய ஹொலசீன காலம் வரையில் வாழ்ந்த நவீன மானிடன் தொடர்பாக ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கி 2010ஆம் ஆண்டில் கலாநிதி நிமல் பெரேரா இங்கிலாந்தில் "Bar International Series" 2142ன் கீழ் "Prehistory of Sri Lanka" நூலை வெளியிட்டுள்ளார். இப்புதிய ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் குகை குடியேற்றத் திட்டம் இற்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கப்பால் விரிந்து செல்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வறண்ட வலய மiழைக்காடுகள் இருந்தன என்பதற்கான காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தெற்காசியாவில் வாழ்ந்த ஆதிமனிதன் பற்றிய காரணிகளும் பட்டதொம்ப குகையிலும் பாஹியங்கல அருகிலும் கிடைத்திருக்கின்றன. இவ்வாதிகால மனிதனின் மிகச் சிறிய கற்கருவிகள் தொழில்நுட்பம், வித்தை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை தொடர்பாக மிகமுக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
நவீன மானிடன் தொடர்பாகக் கலந்துரையாடுகின்ற போது ஆபிரிக்காவிலிருந்து வெளியேறல் கோட்பாட்டை தொல்பொருள் விஞ்ஞானிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். இதன்போது சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நவீன மானிடன் ஆபிரிக்காவின் கிழக்கில் தோன்றி இற்றைக்குச் சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாஹி குடா நாட்டின் ஊடாக ஒரு பகுதியினர் ஐரோப்பாவுக்கும் இன்னுமொரு பகுதியினர் ஆசியாவினூடாக அவுஸ்ரேலியாவுக்கும் விரிவடைந்து சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் மிகமுக்கியமானது தெற்கு நுழைவுப்பாதை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன்போது சீனாஹியிலிருந்து அரபிக் கரையோரமாக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா ஊடாக அவுஸ்ரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அதன் பிரகாரம் நவீன மானிடனின் புராதன காரணிகள் தெற்காசியாவில் இலங்கையிலிருந்து கிடைத்துள்ளது.
இற்றைவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் தகவல்கள் பல கருப்பொருட்களில் கிடைக்கின்றன.
  1. இரணமடு மண்ணை ஒழுங்குசெய்தல் - இவை வடக்கு, தெற்கு, வடமேல் கரையோரத்தில் விரிவடைந்திருக்கின்றது.
  2. கற்குகைகள் - நாடு முழுவதிலும் பரவலாக இருக்கின்ற அதேநேரத்தில் கரையோர ஈரவலயத்தின் தென்மேற்கு கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் மேலதிகமாகப் பரவிச் செல்வதைக் காணமுடிகிறது.
  3. வரலாற்றுக்கு முற்பட்ட திறந்த வெளி இடங்கள் - பெல்லன்பெந்தி பெலஸ்ஸ. இவ்விடம் 2005ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் இற்றைக்கு சுமார் 13,000 ஆண்டுகள் பழைமையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. செந்நிற கபிலநிற மண்வலயம் - உலர் வலயத்தில் இயல்பாக இருக்கின்ற மண் வலயம். வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள் இலட்சக்கணக்கில் விரிவடைந்துள்ளன. அநுராதபுர எத்துல் நுவர இற்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என இதன்போது விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  5. வரலாற்றுக்கு முற்பட்ட சிப்பி படிமம் - ஹூங்கம மினி எத்திலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது வரலாற்று காலத்திற்கு முற்பட்ட இவ்விடம் இற்றைக்கு சுமார் 2,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  6. மாதொட்ட - இலங்கையின் கற்காலத்தின் இறுதிக் காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்விடம் இற்றைக்கு சுமார் 1,800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கற்குகைகளின் தகவல்களைக் காலத்திருத்தம் செய்வதற்காக 2007ஆம் ஆண்டில் ஹொரண பாஹியன்கல அகழ்வு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், 1986ஆம் ஆண்டில் கலாநிதி விஜயபால அவர்கள் மேற்கொண்ட அகழ்வு வேலையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலத்திருத்தம் செய்வதாகும். இதன்போது முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட 4 மண் படிநிலைகளை மிக நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்ததை அடுத்து நூறு படி நிலைகளுக்கு மேல் அவை பரவிச் செல்கின்றன என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் ஸ்கொட்லாந்தின் ஸ்டாலின் பல்கலைக்கழகத்தின் தொல்புவிச்சரித பௌதிக பிரிவின் பேராசியர் இயன் சிம்சன் அவர்களின் ஆய்வு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பின்வருவன அடங்குகின்றன.
  • நுணுக்கமான மண் பற்றிய ஆய்வு.
  • மெல்லிய மண் படிமங்களைப் பற்றிய பகுப்பாய்வு.
  • மகரந்தப் பகுப்பாய்வு.
  • மிகச் சிறிய கற்கருவிகள் பற்றிய ஆய்வு.
  • கற்கருவிகளின் உற்பத்தி தொழில்நுட்பம்.
  • விலங்கு எச்சங்களின் பகுப்பாய்வு.

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்துக்கும் இடைப்பட்ட காலம் இதுவாகும். இந்தக் காலம் முன்னேற்றமடைந்த கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கின்றது. இக்காலத்தில் இலங்கையில் எழுத்து பயன்பாடு தொடர்பான காரணிகள் இல்லாவிட்டாலும்கூட முன்னேற்றகரமான மட்பாண்ட தொழில்நுட்பம், விலங்குகளைப் பழக்குதல், இரும்பு பயன்பாடு, தானியப் பயிர்ச்செய்கை போன்றவை தொடர்பான காரணிகள் கிடைக்கின்றன. இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இக்காலம் கி.மு. 1,300ல் ஆரம்பமாகி கி.மு. 250 வரை விரிவடைந்துள்ளது என்பது தெளிவானதாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு யுகம் எனக் குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் இதில் உள்ள சிறப்பம்சம் யாதெனில், மயான கலாசாரம் விரிவடைந்ததாகும். இந்த பிரபலமான கலாசார அம்சம் பொம்பரிப்பு, யாப்பஹூவ, கொக்அபே, யட்டிகல்பொத்த (கி.மு. 750) இப்பன்கட்டுவ (கி.மு. 700) கலோட்டுவா (கி.மு. 250) ரஞ்சாமடம (கி.மு. 1,300) ஆகிய அகழ்வு தொகுதிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இம் மயான கலாசாரம் ஆரம்ப வரலாற்றுக் காலத்தின் இறுதிப் பகுதிவரையும் விரிவடைந்து சென்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"முளைக்கும் விதை உரைக்கும் உண்மை "


மரமாக இருந்தாலும் செடியாக இருந்தாலும் அது உருவாக அடிப்படையாய் அமைவது விதை ஆகும் . அந்த விதையானது முளைக்கும் பொழுது கூர்ந்து கவனித்தால் ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தை அறியமுடியும் .

விதையை பூமியில் போட்டால் அது முளைக்கத் தொடங்கும் போது முதலில் வெளிவருவது அதன் வேர்ப்பகுதியாகும் . வேர்ப்பகுதி நன்கு மண்ணில் ஊன்றிய பிறகு இலைப்பகுதி மெல்ல மெல்ல நிமிந்து பின் வளரத் தொடங்கும் .

முதலில் தன்னை நிறுத்திக் கொள்ள வேர்ப்பகுதியை பூமியில் இறக்கிய பின்னர் தான் , எந்த தாவரமும் இலைப்பகுதியை வெளிப்படுத்தி பின் ஒவ்வொரு இலையாக வளர வளர வேர்ப்பகுதியையும் வளர்த்து பூமிக்குள் ஆழமாகவும் பரவலாகவும் செலுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் .

அதேபோல் மனிதன் தான் வாழ்வில் வளர்ச்சியை தொடங்கும்போது , எடுத்தவுடன் உயரே வந்து விடவேண்டும் என்று முயலாமல் . முதலில் தன்னை எந்த ஒரு துறையிலும் ஆழப் பதியச்செய்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் . பின்னர் தான் வளர்ச்சியை படிப்படியாக உயர்த்திக் கொள்ள வேண்டும் .

ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் போதும் தனது அடிப்படையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும் . செடியானது தனது வேரை ஆழமாகவும் பரவலாகவும் பதியச் செய்வது போல , தான் வளருவதற்கு ஏற்ப வளர்ச்சிக்கு அடிப்படையானவற்றை , அடிப்படையானவர்களை நம்மிடம் ஆழமாக பற்றுகொள்ளச் செய்ய வேண்டும் . அடிப்படை வலுவற்ற எந்த வளர்ச்சியும் நிலை பெறாது , நீடிக்காது . எனவே வளர்ச்சிக்கு முதல் கட்டம் அடிப்படையை முதலில் அமைப்பது தான் என்பதை ஆழமாக மனதில் கொண்டு செயல் பட வேண்டும் .

வியாழன், 18 ஜூலை, 2013

மாணவர்களின் சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான சுற்றாடல் நிலமைகள்

 
  
மாணவர்களைப்பொருத்தவரை அவர்கள் பிள்ளைப்பருவம் மற்றும் கட்டிளமைப் பருவங்களுக்கு இடைப்பட்டவர்களா உள்ளனர். இத்தகைய இவர்களிடத்தில் பல்வேறு காரணிகள் சாதகமான மற்றும் பாதகமான தக்கங்களை எற்படுத்துகின்றன. இதற்கமைய சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்காரணிகளை அவதானிப்போமாயின்,

1.            பெற்றார்கள்
2.            முத்த சகோதர சகோதரிகள்
3.            சமவயதுக் குழுவினர்
4.            பாடசாலை
5.            சமயஇ சமூக நிறுவனங்கள்
6.            தனியார் கல்வி நிறுவனங்கள்இ வகுப்புக்கள்
7.            ஊடகங்களும் ஓய்வூ நேரங்களும்

ஒரு பிள்ளையின் ஆரம்ப செரல்வாக்குச் செலுத்தும் நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றது. அங்கு பெற்றார்கள் மிகவூம் முக்கியமானவர்கள். அவர்களிடம் இருந்து குழந்தை ஆரம் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றது. அதன்போது பெற்றௌரது ஒத்துழைப்புக்கள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்யூம் மனப்பான்மையை பிள்ளைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்ப அங்கத்தவர்களிடம காணப்படும் அந்நியோன்யமான உறவூ காரணமாக குழந்தை அதனை தனது வாழ்வில் கடைபிடித்துக் கொள்கின்துடன். வளர்ந்துவிட்ட நிலையிலும் அக்குழந்தை சமூகத்தில் அடுத்தவரகளுடன் ஒற்றுமையாகவூம், உதவிகள் செய்தும்இ மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டும் இருப்பதற்கு இது காரணமாகின்றது.
                அடுத்து இங்கு காணப்படும் பாதுகாப்பு உணர்வூஇ ஒருவரை ஒருவர் பரிவூடன் நோக்கி அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் வராமல் பாதுகாப்பார்கள். இந்த நிலையில் இதனை அவதானிக்கும் குழந்தை தன்னிடமும் இந்த பண்பை வளர்த்துக் கொள்கின்றது. அத்துடன் பெற்றார்கள் தங்களுக்கிடையில் நல்ல வார்த்தகளை பயன்படுத்தி கதைத்துக் கொள்ளும் பேHது அதனையே பிள்ளையூம் கைக் கொள்கின்றது. அது சிறந்த மொழிவளத்துக்கும் அடுத்தவர்கள் தன்னை நல்ல பிள்ளை என்று போற்றுவதற்கும் காரணமாகின்றது. ஒருவரது பேச்சைக் கொண்டு அவரை மட்டிடக்கூடிய நிலையில் சிறந்த பேச்சுவழக்கும் இருக்கும் போது அப்பிள்ளை சென்ற இடங்களிலும் தீய வார்த்தைகளை வெறுத்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவூம் இது காரணமாகின்றது.
                குழந்தைப்பருவம் முன்பிள்ளைப் பருவம் என்பன புலக்காட்சி வளர்ச்சிப் படியில் வேகமாக அபிவிருத்தி அடையூம் காலம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த அடிப்படையில் குழந்தையின் வாழ்வில் நுண்மதி விருத்தி சம்பந்தமா அடிப்படை எண்ணக்கரு குடும்பத்தில் தான் உருவாகின்றது. குறிப்பாக இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கயமான விடயம் தனது மூத்த சகோதர சகோதரிகளிமிருந்து உடலை சுத்தமாக வைத்திருக்க குளித்தல்இ போசனையன உணவூ பயன்பாடுஇ நித்திரை மற்றும் கழிவூப் பொருள் அகற்றுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களை பிள்ளை தனது குடும்பத்தில் இருந்த கற்றுக கொள்கின்றது.
                அடுத்து சமவயது குழுக்களுடைய தொடர்புகளினால் குடும்பத்தினால் கிடைக்காத பல விடயங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக எதிர்பாலாரிடம் நடந்து கொள்வேண்டி கண்ணியமா முறை குறித்த அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தனக்கு பொருத்தமான உடை அணிகலன்கள் யாது? எப்படி அமைத்துக் கொள்வது போன்ற விடயங்களை பிள்ளை அறிந்து கொள்கின்றது. இதன் போது அவர்கள் தனது மூத்த சகோதரர்களை பின்பற்றி தன்னை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். சமவயதுக் குழுக்களுடன் பழகும்போது இன்னுமொரு முக்கியமான செயற்பாடு புது சமூகத்துக்கான பாத்திரங்களையூம், குணநல் இயல்புகளையூம் பக்குவதாகும். இதன்மூலம் நல்ல பண்புகளை அடுத்தவர்களுக்குக் கடத்துவதுடன் அடுத்தவரிடமிருந்த நல்ல பண்புகளை கைக்கொள்ளவூம் முடியூமாகும். அத்துடன் ஒத்தவயதுக்குழு மூலம் கிடைக்கும் உதவி புதிய வலுவை உருவாக்கும். இதனால் மூத்தவர்களுடனான கொடுக்கள் வாங்கள்களின்போது முன்னரைவிடவூம் சுதந்திரமாகவூம், வலுவாகவூம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிமாவதுடன், சுயகற்கை, சுய வலு, தன்னைப்பற்றிய தெளிவு, நம்பிக்கை என்பன வளர்வதற்கு ஏதவாகின்றது.
                பாடசாலை மாணவர்களின் சமூகம்சார் செயற்பாடுகளில் கூடுதல் பங்கு வகிக்கின்றது. இங்கிருந்துதான் மூத்த பரம்பறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவூச் செல்வங்கள் இளைய தலைமுறைக்கு கடத்தப்படக் கூடிய இடமாகும். ஒருவன் ஒரு சூழலில் வாழ்வதாயின் அந்த சூழலின் தன்மைகள் பண்பாடுகள் அவனிடம் காணப்படவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவனை அந்த சமூகம் ஏற்காது எனவே மாணவன் நாளை அவன் சமூகப்பிரானியாக வாழ்வதற்கு பாடசாலையின் மூத்த பரம்பறையின் வழிகாட்டல்கள் மிகவூம் முக்கியம் பெறுகின்றது. இங்குதான் சமூக மனப்பாங்குளும்இ வாழ்க்கைத் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அவ்வாறே நல்ல பழக்க வழக்கங்களை பாடசாலை எற்படுத்துகின்றது. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள்இ தினமும் பாடசாலை வளவை சுத்தம் செய்கிறார்கள். இதன்போது அவர்களிடம் பொதுச் சொத்துக்கள் குறித்த பெறுமதி வளர்கின்றதுடன் அவற்றை பாதுகாத்து இளைய தலைமுறையின்ருக்கு கொடுக்க வேண்டும் என்று மனோநிலை ஏற்படுகின்றது. அத்துடன் உயர்ந்த தாழ்ந்தஇ வசதியான வசதி குறைந்த பல மாணவர்களை ஒரு மாணவன் சந்திக் நேருகின்றான் அதன் போது தாழ்வான மாணவனை அல்லது வசதி குறைவான மாணவனை ஒதுக்கிவைக்காது சேர்ந்து நடக்கின்றனர். அவனுடன் ஒன்றான் இருந்து உணவூ உண்கின்றனர். அடுத்த மாணவன் பசியோடு இருக்கும்போது தான்மட்டும் உண்ணாமல் அவர்களையூம் சேர்த்துக் கொள்கின்றனர். இத்தகை பல நல்ல அம்சங்களை பாடசாலை ஒருவனுக்கு கொடுக்கின்றது.
சமய, சமூக நிறுவனங்களை அடுத்த மாணவனிடம் சதாகமான விளைவூகளை ஏற்படுத்தும் இடங்கலாகும். இந்த நிறுவனங்களுடன் மாணவர்கள் அதிகம் தொடர்பு வைக்கின்றனர். இங்கு நல்ல விடயங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனை நல்ல பண்பாடுகள் உடையவனாக மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு மிகுந்த பங்கு இருக்கின்றது. ஏனெனில் இவை மனிதனது நம்பிக்கையூடன் இனைந்து செல்லக்கூடியவை. அங்கு கற்பிக்கப்படும் விடயங்களை மாணவர்கள் தனது வாழ்க்கையில் கடைபிடிக்கின்றார்கள். சமூக சேவைகள் ஏற்பாடு செய்ப்படுகின்றன அங்கு பெரியவர்கள் தமது நேரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஊதியம் எதுவூம் இன்றி தமது சிரமத்தை தானம் செய்கின்றனர். இதனை அப்படியே பின்பற்றும் இளைய தலைமுறை அல்லது மாணவர்கள் அவர்களும் இத்தகைய செயற்பHடுகளில் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் அவர்களிடையே பொது நோக்குஇ தன்னைப்போல் அடுத்தவரையூம் பார்க்கும் பரந்த மனப்பாங்கு வயர்ச்சியடைகின்றது.இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாணவர்களிடைய அடுத்தவரை மதித்தல், பொறுமை, ஒழுங்கமைக்கும் சக்தி மற்றும் தலைமைவகிக்கும் தன்மை, அடுத்தவர்களுடன் ஒத்துப்போகுதல் போன்ற பல நல்ல பண்புகள் மாணவர்களுள் குடிகொள்வதற்கு காரணமாகின்றது.
தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னொரு மக்கிய சமூக அங்கமாக அது காணப்படுகின்றது. அங்கு மாணவர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் பல சமூக சூழ்நிலைகளில் இருந்தும் வருகைதருகின்றனர். இந்த நிறுவனங்கள் மாணவர்களிடையே போட்டித் தன்மையை வளர்க்கின்றது. இதன் மூலம் கல்வியில் ஆர்வம் செலுத்தும் தன்மை அதிகரிக்கின்றதுடன். மாணவர்கள் பாடசாலைக்கு மேலதிகமாக கல்வியைப் பெற்று தனது அறிவூ நிலையை விருத்தி செய்து கொள்கின்ற இடமாகவூம் இது காணப்படுகின்றது. மாணவர்களிடையே பல வித்தியாசமான நடையூடை, பழக்கவழக்கங்கள், பேச்சு, உணவூகள் ஏற்பட இது காரணமாகின்து. இதனால் மாணவரகளுக்கு அடுத்தவர்களது தன்மைகளை புரிந்து கொள்வதற்கும்இ வித்தியாசங்களை அனுசரித்து நடந்து கொள்வதற்கும் முக்கிய சந்தர்ப்பமாகின்றது. இந்த நிறுவனங்களுக்கு அதிகமாக வருபவர்கள் மத்திய வகுப்பினராக இருப்பதனால் மத்திய வகுப்பினரது சமூக இயல்புகள் பரவூவதற்கும் காரணமாகின்றது. பாடசாலைகளில் அடங்கியிருப்பதனால் தனது இயல்புகளை வெளிக்காட்ட முடியாதவர்கள் துணிந்த செயற்படவூம் குழுக்களுக்கு தலைமை தாங்கவூம் சந்தர்ப்பம் அமைகின்றது.
மாணவர்கள் தமது ஓய்வூ நேரங்களை இன்பமாகக் கழிப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள். இதன்போது அவர்கள் இணையம், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், பத்திரிகை போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் கணினி, தொலைக்காட்சி போன்ற வற்றில் அவர்கள் அதிகநேரத்தை செலவிடுகின்றர். அதில் காட்சிப்படுத்தப்படுபவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். இதன் மூலம் சர்வதேச கலாசாரங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மாற்றமுறும் உலக நிலைகளை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்செய்து கொள்ளக்கூடியவர்களாக மாறுகிறனர். இணையத்தின் மூலம் பலருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி ஏற்படுகின்றது. புதிய அறிவூகளை உடனுக்குடன் அறிந்து அதனை பிரயோகிக்க கற்றுக் கொள்கிறார்கள். தனது கருத்துக்களை பயமினிறி தெரிவிக்கக் கூடிய இடமாக இணையம் இன்று காணப்படுகின்றது. பல நல்ல நபர்களுடைய நேரடி உறவினால் மாணவர்கள் தனது மனப்பாங்குகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு வழிஏற்படுகின்றது. அத்தகைய முன்மாதிரிகளை தானும் பின்னபற்றி எதிர்காலத்தில் அத்தகைய பிரபலங்களாக, உலகுக்குப் பிரயோசனம் உடையவர்களாக அவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள். பத்திரகை சஞ்சிககையைப பொறுத்தரையூம் இதே நிலைப்பாடுகளுக்கு மாணர்கள் வருவார்கள். அங்கு அவர்களிடம் வாசிப்புத்துறை வளர்வதற்கும் பாத்திரிகைகளுக்கு எழுதுவதன் மூலம் எழுத்துத்துறை வளர்ச்சியடைவதோடு அறிவூம் வளர்வதற்கு அது காரணமாகின்றது.